வாட்சப் செயலியிலும் விளம்பரங்களை கொண்டு வரும் பேஸ்புக்
வேலு சாமி (Author) Published Date : Sep 28, 2018 05:30 ISTதொழில்நுட்பம்
உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 1.5 பில்லியன் பயனாளர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வாட்சப் செயலியானது, பேஸ்புக் வசம் சென்றவுடன் பல மாறுதல்கள் கொண்டு வரப்பட்டது. மக்களிடையே கருத்து பரிமாற்றத்தை அதிகரிக்க செய்யும் நோக்கில் இந்த வாட்சப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் வாட்ஸப்பிற்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளில் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
ஆனால் தற்போது வாட்சப் செயலியில் மக்களுக்கு இடையூறும் செய்யும் விதமாக விளம்பரங்களையும் பேஸ்புக் நிறுவனம் கொண்டு வரவுள்ளது. பேஸ்புக்கில் விளம்பரங்கள் மூலம் நிறைய வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் பேஸ்புக்கை தொடர்ந்து தற்போது வாட்சப் செயலியிலும் விளம்பரங்களை அறிமுகப்படுத்தி வருமானத்தை ஈட்ட பேஸ்புக் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் வாட்சப் செயலியில் 'Swipe To Left' மற்றும் 'Dark Mode' போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அப்டேட்டிற்கு பிறகு இந்த ஆண்டு இறுதியில் அனைத்து வாட்சப் செயலியிலும் விளம்பரங்களை கொண்டுவர உள்ளனர். இந்த செய்தி வாட்சப் பயனாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. எந்த இடையூறும் இல்லாமல் நிம்மதியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் வாட்சப்பில் விளம்பரங்களை கொண்டு வருவதை மக்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் என்ன செய்வது அவர்களுக்கு தேவை பணம் தானே..