Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

தகாத மீம்ஸ்களை கண்டறிய பேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய AI தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் வரும் தகாத புண்படுத்தக்கூடிய மீம்ஸ்களை கண்டறிவதற்கு புதிய AI தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், புதியதாக இயந்திர கற்றல் அமைப்பினை (machine learning system) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புகைப்படம் மற்றும் விடீயோக்களில் உள்ள வார்த்தைகள் மற்றும் அதன் அமைப்பினை கண்டறியும். இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ரோஸெட்டா (Rosetta) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் கடந்த சில மாதங்களாகவே செயல்பட்டு வருகிறது. இதனை கொண்டு ஒவ்வொரு நாளும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் போன்ற தளங்களில் வரும் பில்லியன் கணக்கான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்த தொழில்நுட்பம் தகாத மற்றும் தீங்கு ஏற்படுத்தக்கூடிய மீம்ஸ், புகைப்படம் மற்றும் விடீயோக்களை கண்டறிவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஒரு புகைப்படம் எந்த அளவிலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனுள் இருக்கும் வார்த்தைகளை துல்லியமாக கண்டறிந்து மொழிபெயர்க்கிறது. ஏற்கனவே வார்த்தைகளை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் (text recognition systems) பேஸ்புக் போன்ற தளங்களில் இருந்து வந்தது. அதன் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சமாக ரோஸெட்டா (Rosetta) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல பில்லியன் பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் போன்ற தளங்களில் ஒவ்வொரு நாளுமே அதிகப்படியான TB அளவிற்கு புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் குவிகின்றன. இந்த சமூக தளங்களில் பல தரப்பட்ட மொழிகள் உபயோகப்படுத்த படுகிறது. இதனால் புகைப்படங்களில் உள்ள வார்த்தைகளை கண்டறிய சிரமமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோஸெட்டா, எப்படிப்பட்ட மொழியையும், வார்த்தையையும் துல்லியமாக கண்டறிந்து அதனை மொழிபெயர்த்து, பின்பு அதனை பயனாளர்களுக்கு காண்பிக்கலாமா வேண்டாமா என்பது முடிவு செய்கிறது. இதன் மூலம் இனி பேஸ்புக்கில் குவியும் மீம்ஸ்களில் ஜோக் மீம்ஸ் எது புண்படுத்தும் மீம்ஸ் எது என்பதை கண்டறிந்து விடும். 

தகாத மீம்ஸ்களை கண்டறிய பேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய AI தொழில்நுட்பம்