பேஸ்புக் மெசெஞ்சர் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய சிறப்பம்சங்கள்
வேலு சாமி (Author) Published Date : Dec 20, 2018 19:09 ISTதொழில்நுட்பம்
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பேஸ்புக்கின் மெசேஞ்சர் செயலியில் பல சிறப்பம்சங்கள் புதியதாக இணைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வழங்கப்பட்ட புது ஸ்டிக்கர்கள் மற்றும் பூமராங் வீடியோ எபக்ட் (Boomerang video looping effect) போன்ற பல அம்சங்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றது. இதன் பிறகு கூடுதல் சிறப்பம்சமாக செல்பி மோடை இணைக்க உள்ளனர்.
இந்த அம்சம் மூலம் கேமிராவில் செல்பி எடுக்கும் போது பேக்ரவுண்ட் (Background) ப்ளர் செய்யப்பட்டு உருவத்தை தெளிவாக காட்டும். இந்த அம்சம் மூலம் கேமிரா மூலம் புகைப்படம் எடுக்கும் போது அருகில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்தால் செல்பி மோடுடன் கூடிய ஐந்து அம்சங்கள் காட்டும். இதில் செல்பி மோடை க்ளிக் செய்து இந்த அம்சத்தை உபயோகிக்கலாம். இந்த அப்டேட்களை விரைவில் உலகம் முழுக்க வழங்க உள்ளனர். இந்த அப்டேட்டை பெற பயனாளர்கள் தங்களுடைய செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.