ads
வெளியானது பேஸ்புக்கின் டேட்டிங் செயலி
வேலு சாமி (Author) Published Date : Sep 22, 2018 16:07 ISTதொழில்நுட்பம்
பேஸ்புக் நிறுவனம் தற்போது சிங்கிளாக தவித்து வருபவர்களுக்காக டேட்டிங் செயலியை உருவாக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் ஒரு வருடத்திற்குள் இந்த டேட்டிங் செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை தற்போது தென் அமெரிக்காவிலுள்ள கொலம்பியாவில் மட்டும் அறிமுகம் செய்துள்ளனர். கொலம்பியாவில் சோதனை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த செயலியின் வரவேற்புகளை பொருத்து இந்தியா தவிர உலகம் முழுவதும் அமல்படுத்த உள்ளனர்.
இந்த செயலியை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த செயலியை உபயோகப்படுத்தலாம். இந்த செயலியை உபயோகப்படுத்த பேஸ்புக் கணக்கு இருத்தல் அவசியம். இதனால் பேஸ்புக்கில் இருக்கும் தனிநபர் தகவல்கள் வெளியே தெரிந்து விடும் என்று கவலை அடைய வேண்டாம். பேஸ்புக்கில் இருந்து உங்களுடைய பெயர் மற்றும் வயதை மட்டும் பேஸ்புக் கணக்கில் இருந்து டேட்டிங் செயலி எடுத்து கொள்ளும்.
இதன் பிறகு உங்களுடைய முழுமையான விவரங்களை கொண்ட டேட்டிங் ப்ரோபைலை உருவாக்க வேண்டும். உங்களுடைய ப்ரொபைலில் புகைப்படம், பெயர் மற்றும் உங்களை பற்றிய இரண்டு வரிகள் போன்றவை அடங்கும். உங்கள் ப்ரொபைல் முழுமையான பிறகு உங்களுடைய லொகேஷன் சார்ந்த தகவலையும் தர வேண்டும்.
அப்போது தான் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100 கிமீ தொலைவிற்குள் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோர் குறித்த விவரங்களை காட்டும். நீங்கள் ஒவ்வொரு முறை டேட்டிங் செயலியை லாகின் செய்யும் போது உங்களுடைய லொகேஷன் விவரத்தை தர வேண்டும். தற்போது சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டதால் இந்த செயலியில் விளம்பரங்கள் மற்றும் பிரீமியம் அக்கவுண்ட் போன்ற அம்சங்கள் ஏதும் இல்லை.