மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனை திட்டத்திற்கு தடை
வேலு சாமி (Author) Published Date : Dec 13, 2018 18:01 ISTதொழில்நுட்பம்
கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் மருந்து விற்பனையாளர்கள் கடைகளை மூடி ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர். இதற்கு மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனை திட்டம் தான் காரணமாக இருந்தது. இந்த திட்டத்தினை அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற பல வலைத்தளங்களில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த திட்டம் அமல்படுத்த பட்டால் மருந்து விற்பனையில் மோசடிகள் அதிகரிக்கும், காலாவதியான மருந்துகள், போலியான மருந்துகள் போன்றவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சி மருந்து விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மத்திய அரசின் இந்த திட்டத்தினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை செய்துள்ளது. இந்த உத்தரவு மத்திய அரசிற்கு ஏமாற்றத்தை அளித்தாலும் பொது மக்களையும், மருந்து விற்பனையாளர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.