வாட்சப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய சிறப்பம்சங்கள்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 18, 2018 10:28 ISTதொழில்நுட்பம்
பேஸ்புக் நிறுவனம் வழங்கப்பட்டுள்ள உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள செயலிகளும் ஒன்று வாட்சப் (Whatsapp). இந்த வாட்சப் மூலம் ஒவ்வொரு நாளும் 1 பில்லியன் பயனாளர்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் புகைப்படம் மற்றும் விடியோக்கள் போன்றவற்றை அனுப்பி உரையாடி வருகின்றனர். இந்த வாட்சப் செயலியில் புதுப்புது அப்டேட்கள் வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது வாட்சப் செயலியில் டார்க் மோட் (Dark Mode) மற்றும் ஸ்வைப் டு ரிப்லை (Swipe To Reply) போன்ற அம்சங்கள் வழங்ப்பட்டுள்ளது. இதில் டார்க் மோட் அம்சம் ஏற்கனவே ஏராளமான செயலிகளில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வாட்சப் செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள வைட் தீமை (White Theme) நீக்கி டார்க் தீமை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
வாட்சப்பை விடியற் காலை முதல் இரவு 12 மணிவரையிலும் உபயோகப்படுத்துவதால் வாடிக்கையாளர் பார்வை திறனை கருத்தில் கொண்டு இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகு அடுத்ததாக வழங்கப்பட்டுள்ள ஸ்வைப் டு ரிப்லை (Swipe To Reply) அம்சம் தங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு உடனடியாக ரிப்லை செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு மெசேஜிற்கு ரிப்லை செய்ய அந்த மெசேஜை சில நிமிடங்கள் அழுத்த வேண்டும்.
ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள ஸ்வைப் டு ரிப்லை (Swipe To Reply) அம்சத்தின்படி ரிப்லை செய்வதற்கு மெசேஜை வலது புறம் தள்ளினாலே போதும், உங்களுக்கு ரிப்ளை செய்வதற்கான மெசேஜ் பாக்ஸ் காண்பிக்கப்படும். இந்த அம்சங்கள் வாட்சப் லேட்டஸ்ட் வர்சனனா 2.18.283-ல் கிடைக்கிறது. இந்த புதிய அப்டேட்கள் தற்போது iOS மற்றும் ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர புதிய அப்டேட்டில், வாட்சப்பில் குரூப்பில் 10 பேருக்கும் அதிகமானோர் இருக்கும் பட்சத்தில் அவர்களை காண 'More' என்ற பட்டனும் வழங்கப்பட்டுள்ளது.