ads
இரைச்சலால் தூங்க முடியாமல் தவித்து வருபவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட இயர்போன்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 20, 2018 10:45 ISTதொழில்நுட்பம்
தற்போதுள்ள நவீன உலகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு நவீன தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன. இந்த வரிசையில் இயர்போனும் (Earphone) அடங்கும். போஸ் என்ற பிரபல இயர்போன் நிறுவனம் இரைச்சலை கட்டுப்படுத்தி அமைதியான சூழலை கொடுப்பதற்காகவே புதிய மாடல் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை இயர்போன்கள் அதிகபட்சமாக 29,363 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.ப்ளூடூத், வயர்லஸ் முறையில் செயல்படும் இந்த இயர்போன்கள் நமது சுற்றுப்புறத்தில் இருந்து வரும் இரைச்சல்களை கட்டுப்படுத்தி அமைதியான சூழலை கொடுக்குமாம்.
இந்த இயர்போன்களை ஒரு முறை ஹார்ஜ் செய்தால் தொடர்ந்து 16 மணிநேரம் உழைக்க கூடியது. இந்த வகை இயர்போன்களை இந்தியாவில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற வர்த்தக தளங்களில் இந்த மாதம் 20ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்துகின்றனர்.ஆண்டிராய்டு, iOS மற்றும் லேப்டாப் போன்றவற்றில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை இயர்போன்கள் மனிதர்களின் காது உட்சவ்வின் நலன் கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயர்போன்கள் முக்கியமாக இரைச்சலால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.முக்கியமாக பலதரப்பட்ட இரைச்சல்களால் தூக்கத்தை இழந்து தவித்து வரும் நகரவாசிகளுக்கும், வீட்டில் குறட்டை சத்தத்தால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கும் ரொம்பவே உதவியாக இருக்கும். இது தவிர இந்த இயர்போன்கள் வாகன இரைச்சல், நாய் குறைத்தல் போன்ற 10 வகையான இரைச்சல்களை ஆராய்ந்து அதனை தவிர்ப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 'நாய்ஸ் மாஸ்கிங் (Noise Masking)' தொழில்நுட்பம் என்கின்றனர். என்ன..விலை தான் தாறுமாறாக உள்ளது.