ads
மனிதர்களை நம்பாமல் ரோபோட்களை பணியில் அமர்த்தும் முன்னணி நிறுவனங்கள்
வேலு சாமி (Author) Published Date : Sep 21, 2018 16:02 ISTதொழில்நுட்பம்
நாம் வாழும் உலகம் ஒவ்வொரு நாளும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு செல்வதால் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்ட ரோபோட்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மனிதர்களை விட அதிக அளவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயந்திரங்களுக்கு இந்த உலகில் மனிதர்களை விட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்கள் மனிதர்கள் செய்யும் பணிகளை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ரோபோட்கள் மனிதர்களை போல், மற்றவர்கள் முக பாவங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுகின்றன. ஆனாலும் இத்தகைய தொழில்நுட்பம் நாம் சினிமாக்களில் காண்பது போல் முழுமையாக வளர்ச்சி அடைய வில்லை.ஆனாலும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்களை உருவாக்க ஆய்வாளர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
முன்னணி நிறுவனங்களுக்கு ரோபோட்கள் தேவை அவசியம் என்பதாலும், தொழில்நுட்பம் நாகரிக உலகின் வளர்ச்சி என்பதாலும் ரோபோட் இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இப்படி அனைத்து துறைகளிலும் ரோபோட்கள் பணியமர்த்தப்பட்டால் அடுத்த 10 வருடங்களில் மனிதர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விடும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தொழில்நுட்பம் அவசியம் என்றாலும் எதிர்காலத்தில் அதுவே மனித குலத்திற்கு ஆபத்தாகி விடும். இந்த எச்சரிக்கை, இன்று நேற்று விடுக்கப்பட்டது அல்ல, தொழில்நுட்பம் துவங்கிய காலகட்டத்தில் இருந்தே பல ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத மக்கள் தொகை பெருக்கத்தால் இத்தகைய தொழில்நுட்பம் அத்தியாவசிய தேவையாக நிற்கிறது.