Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

பகுதி நேர வாய்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புது திட்டம் வெளியீடு: அமேசான் நிறுவனம்

அமேசான் இந்தியா

ஆன்லைன் வர்த்தக  நிறுவனமான அமேசான் இந்தியா புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாட்டில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் விநியோக நடவடிக்கைகளை அதிகரிக்கும் வகையில் பகுதி நேர விநியோக அம்சத்தை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

அமேசான் ஃப்ளெக்ஸ் என்ற பயன்பாட்டின் மூலம் இரு சக்கர வாகனம் வைத்துள்ள தனிநபர்கள் தங்களை பற்றின விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களது வசதிக்கேற்ப பகுதி நேரத்தை குறிப்பிட்டு சொந்த அட்டவணையை உருவாக்கிக்கொள்ளலாம். அமேசான் சார்பாக பொருட்களை விநியோகம் செய்தல் ஒரு மணி நேரத்திற்கு ரூ .120-140 சம்பாதிக்கலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளனர்.

பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த புதிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் முக்கியமான நகரங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமேசான் கூறியுள்ளது. ஒவ்வொரு பகுதி நேர பங்குதாரரின் பின்னணி சரி பார்க்கப்பட்டு அவர்களுக்கு சில காலம் பயிற்சிகளும் தரப்படும். பயிற்சிக்கு பின் விநியோக வேலையில் ஈடுபடுத்தப்படுவர். விநியோகிக்கும் நபர்கள் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் பணிபுரிவார்கள். 

                                 

பகுதி நேர பணிக்கு பதிவு செய்ய விரும்புவோர் வசதிக்கேற்ப நாள் மற்றும் நேரம் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 4 மணிநேரம் பணியில் ஈடுபடலாம். ஒரு வாரத்திற்கு, ஒரு டெலிவரி பங்குதாரர் சுமார் 25-30 மணிநேரங்களுக்கு விநியோகங்களை வழங்க இயலும். 

அமேசான் ஃப்ளெக்ஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான பகுதி நேர வாய்ப்புகளை உருவாகின்றன. தங்களது வசதியான நேரத்தில் சொந்த முதலாளித்துவத்தோடு அமேசான் நிறுவனத்தின் மூலம் வருமானத்தை பெறுகின்றனர் என்று துணை தலைவர் அகிஹில் சக்சேனா கூறினார். மேலும் நாடு முழுவதும் தற்போதுள்ள  விநியோக திறன்களை தொடர்ந்து அளவிடுகையில், அமேசான் ஃப்ளெக்ஸ் மூலம் அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கும், விநியோகங்களை விரைவுபடுத்துவதற்கும்  திறனை தொடர்ந்து வளர்க்க அமேசானுக்கு உதவியாக இருக்கும் என கூறினார். 

முதன்முதலில் 2015 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வட அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட ஆறு நாடுகளில் நேரடியாக பயன்பாட்டில் உள்ளது. 

பகுதி நேர வாய்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புது திட்டம் வெளியீடு: அமேசான் நிறுவனம்