வாட்சப்பை தொடர்ந்து ஜியோபோனில் யூடியூப் செயலியும் அறிமுகம்
வேலு சாமி (Author) Published Date : Sep 20, 2018 16:27 ISTதொழில்நுட்பம்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ போனின் இரண்டு மாடல்களும் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. தொடர்ந்து புது புது சலுகைகளை வழங்கி வருவதால் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10 மடங்கு உயர்ந்துள்ளதாக டிராய் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஜியோபோனின் இரண்டு மாடல்களிலும் வாட்சப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜியோபோனில் உபயோகப்படுத்துவதற்காகவே வாட்சப் செயலி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், வாட்சப் போன்ற அம்சங்களை தொடர்ந்து தற்போது யூடியூப் செயலியும் ஜியோபோனில் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் செயலியை இரண்டு ஜியோபோன் மாடல்களிலும் வழங்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள யூடியூப் செயலியை உபயோகப்படுத்த அருமையாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு வாட்சப் செயலியை வழங்கியுள்ள நிலையில் யூடியூப் செயலியையும் விரைவாகவே வழங்கியுள்ளனர்.