ads

ஐஒஸ் போன்களை தொடர்ந்து நோக்கியா ஆண்டிராய்டு போன்களிலும் வாட்சப் சேவை நிறுத்தம்

ஏற்கனவே பழைய ஐஒஸ் மொபைலில் வாட்சப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆண்டிராய்டு, நோக்கியா மற்றும் விண்டோஸ் மொபைல்களிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பழைய ஐஒஸ் மொபைலில் வாட்சப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆண்டிராய்டு, நோக்கியா மற்றும் விண்டோஸ் மொபைல்களிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைதள செயலியான வாட்சப், தொடர்ந்து புதுப்புது அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருவதால் பழைய வர்சன் போன்களில் வாட்சப் சேவை இனி இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே iOS-ன் பழைய வர்சன் மொபைல்களில் வாட்சப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நோக்கியா, ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் போன்களிலும் வாட்சப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஒஸ் போன்களை தொடர்ந்து நோக்கியா ஆண்டிராய்டு போன்களிலும் வாட்சப் சேவை நிறுத்தம்

இந்த அறிவிப்பின் படி வாட்சப் சேவையானது, நோக்கியா எஸ்40 மொபைல் போன்களில் வரும் இந்த ஆண்டு டிசம்பர் 31வரை மட்டுமே வாட்சப் சேவை இருக்கும். ஆண்டிராய்டின் பழைய வர்சனான 2.3.7 மாடல் வரை இருக்கும் போன்களில் வாட்சப் சேவையானது 2020 வரை தாக்குப்பிடிக்கும். ஆனாலும் வாட்சப்பில் வரும் புது புது அப்டேட்களை பெற முடியாது. ஐஒஸ் 7 வரை இருக்கும் மாடல்களுக்கும் இதே நிலைமை தான்.

ஐஒஸ் போன்களை தொடர்ந்து நோக்கியா ஆண்டிராய்டு போன்களிலும் வாட்சப் சேவை நிறுத்தம்

அதாவது 2020 வரை செயல்படும் ஆனால் அப்டேட்களை பெற முடியாது. வாட்சப் செயலியை டெலிட் செய்து விட்டால் மறுபடியும் வாட்சப்பை இன்ஸ்டால் செய்ய முடியாது. தற்போது வரும் லேட்டஸ்ட் வாட்சப் செயலியானது ஆண்டிராய்டு 4.0 மற்றும் அதற்கு மேல் உள்ள வர்சன்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் போன்களிலும் 8.1 வர்சன் அல்லது அதற்கு மேலிருக்கும் வர்சன்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

ஐஒஸ் போன்களை தொடர்ந்து நோக்கியா ஆண்டிராய்டு போன்களிலும் வாட்சப் சேவை நிறுத்தம்