ads

புதிய ரோவர் விண்கலத்திற்கு பெயரிட மாணவர்களிடம் போட்டியை வைத்துள்ள நாசா

மார்ஸ் ரோவர் விண்கலத்திற்கு பெயர் சூட்ட நாசா மாணவர்களிடம் போட்டி ஒன்றை வைத்துள்ளது.

மார்ஸ் ரோவர் விண்கலத்திற்கு பெயர் சூட்ட நாசா மாணவர்களிடம் போட்டி ஒன்றை வைத்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, வரும் 2020ஆம் ஆண்டில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக புதிய ரோவர் விண்கலம் அடங்கிய செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பவுள்ளது. இந்த செயற்கைகோள் புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டர் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாயவுள்ளது.

புதிய ரோவர் விண்கலத்திற்கு பெயரிட மாணவர்களிடம் போட்டியை வைத்துள்ள நாசா

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பவுள்ள புதுவகை ரோவர் விண்கலத்திற்கு பெயர் வைக்க மாணவர்களுக்கு போட்டி ஒன்றை வைத்துள்ளது. அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் கே12 கிரேட் வைத்திருப்பவர்கள், இந்த ரோவர் விண்கலம் பற்றி கட்டுரையை எழுதி அதற்கு பெயர் சூட்டி நாசாவிற்கு அனுப்ப வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், 2020இல் அனுப்பவுள்ள ரோவர் விண்கலத்தில் பணியாற்றும் வாய்ப்பினை பெறுவார்கள்.தற்போது நாசாவில் பணிபுரிய பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதிய ரோவர் விண்கலத்திற்கு பெயரிட மாணவர்களிடம் போட்டியை வைத்துள்ள நாசா

மாணவர்கள் நாசாவில் பணிபுரிய எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை சோதித்து பார்க்க நாசா இந்த போட்டியை வைத்துள்ளது. இது குறித்து நாசாவின் தலைமை அலுவலர் தாமஸ் ஸர்புசென் என்பவர் கூறுகையில் "மார்ஸ் ரோவர் விண்கலத்தை 1997ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். அப்போது முதல் 21 வருடங்களாக ரோவர் விண்கலத்திற்கு பெயரிடும் போட்டியை நடத்தி வருகிறோம். இதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ரோவர் விண்கலத்திற்கு பெயரிட மாணவர்களிடம் போட்டியை வைத்துள்ள நாசா