ads
தொலைத்தொடர்பு சேவைக்கு நிரந்தர குட்பை சொன்ன அனில் அம்பானி
புருசோத்தமன் (Author) Published Date : Sep 20, 2018 12:21 ISTதொழில்நுட்பம்
அம்பானி குடும்பத்தில் அண்ணன் தம்பியான முகேஷ் அம்பானியும், அணில் அம்பானியும் தொழில்துறையில் போட்டி போட்டு மோதி கொள்கின்றனர். இதில் முகேஷ் அம்பானி ஜியோ மூலமாக அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தொடர்ந்து சரிவுகளை சந்தித்து கொண்டு வருகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தொலைத்தொடர்பு திரையில் 16 வருடங்களாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது தொலைத்தொடர்பு துறையில் இருந்து நிரந்தரமாக விலகி கொள்வதாக அனில் அம்பானி பொது கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன தலைவர் அனில் அம்பானி மும்பையில் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது "சாமானிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடர்பு சேவையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வழங்கி வந்தது. ஆனால் இதன் மூலம் 40000 கோடி அளவில் பெரும் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் தொலைத்தொடர்பு சேவையில் இருந்து ஆர் காம் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகிறது. இதன் பிறகு ரியல் எஸ்டேட் துறைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.