பேஸ்புக்கில் ஹேக்கிங் செய்யப்பட்ட 5கோடி அக்கவுண்ட்கள்
புருசோத்தமன் (Author) Published Date : Oct 01, 2018 15:44 ISTதொழில்நுட்பம்
உலகம் முழுவதும் 43 மொழிகளில் செயல்பட்டு வரும் பேஸ்புக்கை, மாதந்தோறும் 2 பில்லியன் பயனாளர்கள் உபயோகித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பேஸ்புக் பற்றி ஏராளமான சர்ச்சைகள் புதிது புதிதாக வந்து கொண்டே வருகின்றது. அந்த வகையில் தற்போது பேஸ்புக்கின் 5 கோடி பயனாளர்களின் அக்கவுண்டுகள் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
பேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டினால் இந்த ஹேக்கிங் நடந்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் நீண்ட ஆண்டுகளாகவே இந்த ஹேக்கிங் நடைபெற்றுள்ளது. ஆனால் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி தான் பேஸ்புக் ஆய்வாளர்கள் குழு இந்த பாதுகாப்பு குறைபாட்டினை கண்டறிந்துள்ளனர். இதனால் இந்த குறைபாட்டை சரிசெய்வதற்காக பேஸ்புக் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் (View As) அம்சம் மூலம் இந்த ஹேக்கிங் நடைபெற்றுள்ளது. இதனால் தற்போது இந்த அம்சத்தை நீக்கியுள்ளனர். இந்த அம்சம் மூலம் பேஸ்புக்கின் பாதுகாப்பிற்கும் நுழைந்து கிட்டத்தட்ட 5 கோடி அக்கவுண்ட்களை ஹேக்கிங் செய்துள்ளனர்.இந்த ஹேக்கிங் செய்யப்பட்ட கணக்குகளில் உங்களுடையதும் இருக்கிறதா என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
பேஸ்புக் தனது பயனாளர்களின் அக்கவுண்ட் ஹேக்கிங் செய்யப்பட்டிருந்தால் அந்த அக்கவுண்ட்டுக்கு நோட்டிபிகேஷன் (Notification) நியூஸ் பீட் (News Feed)-இல் காண்பிக்கும். இதன்படி உங்களுடைய அக்கவுண்ட் News Feed-இல் இது போன்ற நோட்டிபிகேஷன் வந்தால் உங்கள் அக்கவுண்ட் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதை என்பதை உணரலாம். மேலும் பேஸ்புக்கில் தங்களுடைய கணக்குகளை பயனாளர்கள் மீண்டும் புது பாஸ்வோர்ட் கொடுத்து அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.