ads
2.75 கோடிக்கு விலைபோன ஆப்பிள் நிறுவனத்தின் ஆதாம் கணினி
வேலு சாமி (Author) Published Date : Sep 27, 2018 18:05 ISTதொழில்நுட்பம்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம் கடந்த 42 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கணினி, ஐபோன், வாட்ச் போன்ற பல துறைகளில் தனது சேவையினை வழங்கி வருகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கணினியான ஆப்பிள் 1 ஏலத்தின் மூலம் சுமார் 2.75 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கணினியான ஆப்பிள் 1 கணினி, கடந்த 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை மையமாக வைத்து தான் ஆப்பிள் நிறுவனம் கணினி உலகில் தனது ஆதிக்கத்தை ஆரம்பித்தது. இந்த கணினியை 1976இல் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். இதன் பிறகு 42 வருடங்களை கடந்தும் இந்த கணினி எந்த பாதிப்பும் அடையாமல் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. இதனால் இந்த முதல் ஆப்பிள் கணினியை 2.75 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளனர்.
இது ஆப்பிள் நிறுவனத்திற்கு கிடைத்த பெருமையான விஷயமாகும். 40 வருடங்களை கடந்தும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் வடிவமைப்பு கணினி நல்ல முறையில் செயல்பட்டு வருவதால் தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு நல்ல முறையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஏராளமானோர் ஆப்பிள் நிறுவனம் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் பயனாளர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.