ads
அஜித் பாணியில் தல தோனி ; ஷூ லெஸ் கட்டும் ரெய்னா !
கார்த்திக் (Author) Published Date : May 11, 2019 14:23 ISTSports News
விசுவாசம் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில், விளையாட்டு ஓடுதளத்தில் தன் மகளுடன் அன்பைப் பரிமாறும் காட்சி அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
அது போல, ஐபில் போட்டியில் 'குவாலிபயர் -2' போட்டியின் வெற்றிக்குப் பிறகு சென்னை கேப்டன் தோனி தன் மகள் ஜிவாவுடன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
2019ல் 12வது ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய நான்கு அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று தகுதி பெற்றன.
குவாலிபயர் -1 முதல் போட்டியில் மும்பை அணியுடன் நடந்த போட்டியில் சென்னை அணி மண்ணைக் கவ்வினாலும், சாம்பலில் இருந்து மீண்டு வரம் பீனிக்ஸ் பறவை போல, குவாலிபயர் -2 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
முதலில் ஆடிய டெல்லி அணியை 147 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது சென்னை. எட்டக் கூடிய இந்த இலக்கை 19 ஓவர்களிலேயே எட்டியது சென்னை அணி. இதன் மூலம், கலந்து கொண்ட 10 தொடர்களில், இதையும் சேர்த்து 8 தொடர்களில் சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வயசானாலும் தனக்கான மவுசு குறையவில்லை என்பது தான் தல தோனியின் தனித்துவமே. வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில், மும்பை அணியை சந்திக்க ஆயத்தமாகிறது, சென்னை. குவாலிபயர் - 1 ல் கண்டா தோல்விக்கு பழி தீர்க்க காத்துக் கொண்டிருக்கிறது. டில்லிக்கு எதிரான சென்னை அணியின் வெற்றியை மும்பை ரசிகர்களுக்கு எச்சரிக்கும் விதமாகவும் சென்னை ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
விசாகப்பட்டினத்தில் நடை பெற்ற இந்த ஐபில் போட்டியின் முடிவில், தனது மகள் ஜிவாவுடன் தோனி விளையாடினார். இதைப் பார்த்து, சின்ன தல என்று செல்லமாக அழைக்கப்படும் சென்னை வீரர் ரெய்னாவும் தனது மகள் கிராசியாவுடன் சேர்ந்து கொண்டார்.
பின்னர், ஜிவாவும் கிராசியாவும் சேர்ந்து விளையாடினர். இருவரும் அவரவர் தந்தை கை பிடித்து ஒன்றாக நடந்த காட்சி இன்றைய வலைப்பேச்சாக மாறி உள்ளது. ஜிவா, தன்னுடைய அப்பா தோனிக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சிக்கு, விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை சேர்த்திருந்தால். அப்படியே விசுவாசம் படத்தின் இறுதிக் காட்சியைப் போல இருந்திருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தந்தை மகளின் பாசக் காட்சிகளையும் தாண்டி, நேற்றைய போட்டியின் நடுவில் சில சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடந்தன. ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது, அவருடைய ஷூ லேஸை ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த ரெய்னா கட்டிய வீடியோ காட்சியைப் பார்த்து சென்னை ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற அணியின் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ரெய்னாவின் இந்த செயல் நேற்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் கூட.
Daddy's pari 🥰🥰🥰ðŸ˜ðŸ˜ðŸ¤©ðŸ¤©ðŸ˜ðŸ˜ðŸ˜@msdhoni @CskIPLTeam @whistIepodu @ImRaina @dhoniraina_team pic.twitter.com/4VZ1ctYNrO
— Vijay-mahi🇮🇳😘😘-fanðŸðŸlover (@Vijay78707193) May 11, 2019
People love that Suresh Raina (@ImRaina) tied @RishabPant777’s shoelaces during the #CSKvDC Indian Premier League qualifier. ðŸ https://t.co/jsdH3hJSs4
— Twitter Moments India (@MomentsIndia) May 10, 2019