உலக கோப்பை அரையிறுதி போட்டிக்குள் இந்தியா அணி
ராம் குமார் (Author) Published Date : Jul 03, 2019 05:30 ISTSports News
எட்க்பாஸ்டனில் நடந்த உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா அணி. மேலும் கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு பிறகு இந்தியா தங்களின் இடத்தையும் பதிவு செய்துள்ளது.
இரண்டு முறை முன்னாள் சாம்பியன்களான இந்தியா அணி நடந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. மழையினால் ஒரு போட்டியை தவிர்க்க நேரிட்டது. இம்முறை பங்களாதேஷ் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என இருந்த மெலிதான நம்பிக்கையை போட்டியில் வெற்றி கண்டு அதனையும் முடிவிற்கு கொண்டுவந்தது.
தொடர்ச்சியாக நடக்கும் போட்டிகளில் இந்திய அணியின் நாயகன் ரோஹித் சர்மா ஒற்றை எண்களை விடுத்து சதங்களாக விளாசி தனது அணிக்கு பலத்தை சேர்த்து வருகிறார்.
முஸ்தாபிசுர் ரஹ்மானின் 5-59 என்ற கணக்கில் விக்கெட்களை வீழ்த்தினாலும் இந்திய அணியின் ஆட்டநாயகன் ரோஹித் சர்மாவின் 104 ரன்கள் இந்தியா அணியை 314-9 என்ற கணக்கில் கொண்டு செல்ல உதவியது.
பங்களாதேஷ் அணி இரண்டு ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்தியாவின் நம்பிக்கை பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 4-55 என்ற கணக்கில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடைசி கட்டத்தில் பும்ராவின் இரு தொடர் யார்கர் பந்துகள் ஸ்டம்ப்பை எகிறவைத்து வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த வங்கதேச அணியை ஆல் அவுட் செய்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறவும் செய்தது.