Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019: இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

உலகக்கோப்பை 2019: இந்திய அணி

பிசிசிஐ'ன் தலைமை தேர்வாளரான பிரசாத்  உலகக்கோப்பை 2019த்திற்கான  15 பேர் கொண்ட இந்தியா அணியை அறிவித்துள்ளார். 

தினேஷ் கார்த்திக் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்டின் உலகக்கோப்பை கனவை தகர்த்து அணியில் நிலைபெற்றுள்ளார். ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்துக்கும் ஏதிராக ஆடிய இந்தியா அணியிலிருந்து பல மாற்றங்களை மேற்கொண்டு தரம் வாய்ந்த உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளனர். ரிஷாப் பன்ட், அம்பதி ராயுடு அதிகம் ஈர்க்கத் தவறியதால் அணியில் இடம்பெறாமல் போய்விட்டனர். 

எதிர்பார்த்தபடி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான் மற்றும் விராத் கோஹ்லி ஆகியோர் சிறந்த மூன்று இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்பட்டுள்ளார். கே.எல். ராகுல் பற்றி , தலைமை தேர்வுக்குழு பிரசாத் கூறுகையில், "முன்னணி வரிசையில்  கே.எல். ராகுலின் பங்கு சிறந்து காணப்படுவதாகவும் மேலும் அவர் இருப்பு தொடக்க ஆட்டக்காரராகவும் விளங்குவர்." 

தமிழ்நாட்டின்  விஜய் ஷங்கர் தனது "முப்பரிமாண" குணங்களுக்காக அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆசியா கோப்பையிலிருந்து இந்தியாவின் நான்காவது வீரராக இருந்த அம்பதி ராயுடு,  ஆஸ்திரேலிய தொடரிலும் மேலும் ஐபிஎல் போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை காண்பிக்கவில்லை . ஆஸ்திரேலிய தொடரில் ராயுடுவின் அதிகபட்ச ரன்கள் 18 ஆகும். ஜனவரி மாதம் நியூசிலாந்திற்கு எதிராக, அவர்  50 மற்றும் கூடுதல் ரன்களை மட்டுமே பெற்றார்.

அணியில் விராட் கோலி கேப்டனாகவும் ரோஹித் சர்மா துணை கேப்டனாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அணியில் டோனி, ஜாதவ், குலதீப் யாதவ், ஹர்டிக் பாண்டிய, புவனேஸ்வர் குமார், சஹல், பும்ராஹ், ஷமி இடம்பெற்றுள்ளார். 

15 பேர் கொண்ட உலகக்கோப்பை இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மகேந்திர சிங் டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்ந்திரா சாஹல், ஜஸ்பிரித்  பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019: இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ