ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 வெற்றி தொகை எவ்வளவு தெரியுமா?
ராம் குமார் (Author) Published Date : May 18, 2019 15:25 ISTSports News
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் இந்த மாதம் மே 30 அன்று தொடங்க உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியாக இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ளது.
இந்த முறை வெற்றி பெறும் அணிக்கு பரிசு தொகை இன்றைய தினத்திற்கு அதிகப்பச்ச தொகை நிர்ணயக்கப்பட்டுள்ளது. பரிசு தொகையாக அமெரிக்கா டாலர் மதிப்பில் 4 மில்லியன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக கோப்பை இறுதி போட்டி ஜூலை 14 நடைபெறவிருக்கின்றது. இறுதி போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசு தொகை 4 மில்லியன் டாலர் வழங்கப்படும்.
இறுதி போட்டியில் இரண்டாம் இடம் வெல்லும் அணிக்கு 2 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. அரை இறுதி சுற்றில் வெளியேறும் அணிகளுக்கும் 80,000 டாலர் வழங்கப்படும். ஒவ்வொரு நிலை லீக் போட்டியாளர்களுக்கும் 40,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் மற்றும் ஒவ்வொரு லீக் நிலையில் வெற்றிபெறும் அணிகளுக்கு 100,000 டாலர் பரிசாக வழங்கப்படும்.
உலக கோப்பைக்கு என்று இம்முறை 10 மில்லியன் டாலர் அடுக்கப்பட்டுள்ளது. இம்முறை மிகவும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை உலக கோப்பை வடிவமைத்த விதமும், அமைக்கப்பட்ட விதிமுறைகளும் ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை அளிக்கவிருக்கும். தேடுக்கப்பட்ட 10 அணிகளும் எல்லா அணிகளுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வர். அதிலிருந்து தேர்ச்சி பெற்று வரும் அணிகளே அரை இறுதி வரை முன்னேறும். தகுதியான சிறப்பான அணிகளே தேர்ச்சி பெரும் என்கின்றனர்.