வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏன்?
ராம் குமார் (Author) Published Date : Apr 27, 2019 13:01 ISTPolitics
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடாதது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் சொந்த முடிவு என்று சாம் பிட்ரோடா கூறினார். வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சி வேட்போளரை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரியங்கா காந்தியின் தேர்தல் விறுவிறுப்பு குறித்த விவாதம், காங்கிரஸ் கட்சி அஜய் ராயை வேட்பாளராக அறிவித்தவுடன் வியாழக்கிழமை முடிவடைந்தது. ராகுல் காந்தி தேர்தல் குறித்த முடிவை பிரியங்காவிடம் விட்டுவிட்டார் என்று பிட்ரோடா கூறினார். ப்ரியங்காவிற்கு பல கட்சி பொறுப்புகள் இருபாத்தால் இதுவும் வஸ்ண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
ஒரு தொகுதியில் கவனம் செலுத்துவதை விட, அவர் கையில் உள்ள வேலைக்கு கவனம் செலுத்தவுள்ளார் என்று இந்திய வெளிநாட்டு காங்கிரஸின் தலைவரான பிட்ரோடா தெரிவித்தார். "இந்த முடிவு இறுதியாக அவருடையது மற்றும் அவர் அதை முடிவு செய்தார்," என்று அவர் கூறினார். பிரியங்கா காந்தி தனது கட்சிக்கான கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக உள்ளார்.