ads

தேர்தல் தினத்தன்று ஆடியோ லீக் செய்து கலவரத்தை தூண்டிய இருவர் கைது

கலவரத்தை தூண்டிய இருவர் கைது

கலவரத்தை தூண்டிய இருவர் கைது

தேர்தல் தினத்தன்று கலவரத்தை தூண்டிய இருவர் கைது, சாதியை பற்றிய ஒலியை பரப்பி பொன்னமராவதி தொகுதியில் கலவரத்தை தூண்டிய பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார்(34) வசந்த்(30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தஞ்சாவூர் மக்களவை தேர்தலில் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த ஒலியை வெளியிட்டதாக மத்திய மண்டல ஐஜி வரதராஜு தெரிவித்தார்.

ஆனால் இந்த திட்டம் பின்னாற்பற்றி சிவகங்கை தொகுதி கீழ் வரும் பொன்னமராவதியில் வீழ்ச்சியை சந்தித்தது. செல்வகுமார் சிங்கப்பூரில் வேலை செய்கிறார், அவர் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார். வசந்தின் ஆலோசனையில் ஒலியை சிங்கப்பூரில் இருந்து செல்வகுமார் பதிவு செய்து வெளியிட்டதாக ஐஜி வசந்தராஜூ தெரிவித்தார்.ஒலிகுறிப்பில் இருவர் இன்னொரு சமூக மக்களை பற்றி தவறாக பேசுவதாக உள்ளது. ஏப்ரல் 14 அன்று ஒலி குறிப்பு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டதாகவும் ஏப்ரல் 17 ஆம் குறிப்பு வெளியிடப்பட்டதாகவும் வரதராஜு அவர்கள் கூறினார்.

மேலும் இந்த ஒலி குறிப்பு அடுத்த தினமே ஒரு பதற்றத்தை பொன்னமராவதி தொகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. பொன்னமராவதி சேர்த்த மக்கள் 2000 பேர் காவல் நிலையம் முன்பு காரவாதிகளை கைது செய்யும் படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்து காவல் நிலையத்தில் உள்ள வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இரண்டு காவலாளிகள் கல்லால் தாக்கப்பட்டார்கள். கலவரம் வெடிக்கவே பொன்னமராவதியில் 144 தடை விதிக்கப்பட்டது.

தேர்தல் தினத்தன்று ஆடியோ லீக் செய்து கலவரத்தை தூண்டிய இருவர் கைது