ads
மோடி அலையை புறக்கணித்தது தமிழகம், பாஜகவிற்கு திராவிட நாட்டில் தொடரும் தோல்வி
ராம் குமார் (Author) Published Date : May 24, 2019 13:38 ISTPolitics
மக்களவை தேர்தல் 2019 முடிவடைந்த நிலையில் பாஜக இந்தியா முழுவதும் பெரும் வாக்கு சதவீதத்தை பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளது. வட இந்தியாவில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்த பாஜக தென்னிந்தியாவில் வழக்கம் போல மோசமான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் வழக்கத்திற்கு மாறாக, இம்முறை கர்நாடக மாநிலத்தில் பாஜக பெரும் வெற்றியை கண்டுள்ளது. இது அக்கட்சியின் முதல் தென்னிந்தியா பெரும் வெற்றி என்று கூறலாம்.
ஆந்திர, தெலுங்கானா மற்றும் கேரளாவில் படு தோல்வியடைந்த பாஜக, தமிழகத்தில் ஆளும் திராவிட கட்சியுடன் கூட்டணி வைத்தி அதன் வேட்பாளர்கள் ஒரு இடத்தில கூட வெள்ளாமல் ஆசரியத்தில் ஆழ்த்தியது. மேலும் அவர்களின் அதிமுக மற்றும் பிற கட்சி கூட்டணிகள் இணைந்து மொத்தம் தமிழகத்தில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் மோடி அலை ஓங்கி நின்றாலும் தமிழகத்தில் சோக்கிதார் பிரச்சாரம் எடுபடவில்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கையில் 37 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் கேரளாவுடன் இணைந்து தென்னிந்தியாவில் இருந்து எதிர்க்கட்சி பலம் சற்று கூடுதலாகவே உள்ளது.தமிழகத்தில் பாஜக சார்பில் நின்ற நட்சத்திர வேட்பாளர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா, போன் ராதாகிருஷ்ணன் போன்றோர் எதிர்பார்த்தவாறு வெற்றி பெற வில்லை என்றாலும் தமிழிசை தனது அண்மைய பெட்டியில் இது வெற்றிகரமான தோல்வியே என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆளும் பாஜகவிற்கு மிகுந்த எதிர்ப்பு உள்ளது. மேலும் கடந்த நாட்களில் நடந்த ஹைட்ரொகார்பன் திட்டம், டெல்லி விவசாயிகள் போராட்டம், நீட் தேர்வு விவகாரம் போன்ற சம்பவங்கள் மத்திய அரசின் மேல் இருக்கும் மக்களின் கோபம் அதிகரித்துகக்கொண்டேதான் இருந்தது. இதோடு சேலம் எட்டுவலி சாலை மற்றும் போராட்ட வன்முறை சம்பவங்கள் மாநில அரசின் நம்பகத்தன்மையை கெடுத்ததால், எதிர்க்கட்சியான திமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது.