மத்தியில் தமிழ் மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கவேண்டும்: மு.க ஸ்டாலின் கோரிக்கை
ராம் குமார் (Author) Published Date : Jun 06, 2019 05:30 ISTPolitics
மத்திய அரசின் மூன்று மொழி சூத்திரம் அமல் படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. திமுக தலைவர் கூறுகையில், அனைத்து மத்திய அரசாங்க அலுவலங்களில் தமிழ் மொழியை அதிகாரபூர்வ மொழியாக கொண்டுவருமாறு கோரினார்.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீகின் முன்னாள் தலைவர் குயைத்-இ-மில்லத்தின் 124 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும் நிருபர்களிடம், மத்திய அரசாங்க அலுவலகங்களில் தமிழ் மொழி அதிகாரப்பூர்வ மொழியை உருவாக்குவதற்கு ஒரு சபதம் இன்றைய தினத்தில் எடுக்க வேண்டும் என்றார். இந்த காரணத்திற்காக திமுகவின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறினார்.
மாநில சட்ட மன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஸ்டாலின் அவர்கள், மூன்று மொழி திட்டம் மூலம் மத்திய அரசு ஹிந்தி மொழியை தமிழ் மக்கள் மீது திணிக்க முயல்வதாகவும், தமிழர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்ததால் மத்திய அரசின் முடிவினை திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
சி.என்.அண்ணாதுரை அவர்களால் இயற்றப்பட்ட இரண்டு மொழி விதிமுறையை நாடு முழுவதும் கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று திமுகவினரால் நேற்றய தினம் முன்மொழியப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு பின்னர் சர்சைக்குரிய மூன்று மொழி அமல்ப்படுத்தும் ஏற்ப்பாட்டை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
வரைவு கல்வி கொள்கை மறுசீரமைப்பிற்கு பின்னர், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியை மூன்று மொழி விதிமுறை மூலம் முன்மொழியும் திட்டம் மத்திய அரசினால் கைவிடப்பட்டது.
மூன்று மொழிகளின் முன்மொழிவு முக்கியமாக மாநிலத்தில் சீற்றம் அடைந்ததால் இந்த முடிவு திரும்ப பெறப்பட்டது.
1967 ஆம் ஆண்டு திமுக கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஆங்கிலம் தமிழ் ஆகிய இரண்டு மொழி விதிமுறையை 1968 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தனர். திமுகவின் நிறுவனர் சி.என் அண்ணாதுரை அவர்களால் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.