ads
புதுச்சேரி அரசாங்கத்தின் விவகாரங்களில் ஆளுநர் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
ராம் குமார் (Author) Published Date : May 01, 2019 16:16 ISTPolitics
சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை குழு, மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி ஆளுநரின் கிரண் பேடிக்கு வழங்கிய நிர்வாக அதிகாரங்கள் புறக்கணிக்கணிக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே. லக்ஷ்மிநாராயணன் தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்றம் அரசாங்கத்தின் தினசரி நடவடிக்கைகளில் குறுக்கிட கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றம் பேடிக்கு கோரிக்கைகளை கோரவும் அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுப்பதற்கும்
அதிகாரமில்லை என்று உத்தரவு கொடுத்தனர். நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி கவர்னர் செயல்பட வேண்டும் என லக்ஷ்மிநாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்க்கே உரிமை உள்ளது என்று கூறினர்.
மத்திய உள்துறை அமைச்சகம் கிரண் பேடிக்கு வழங்கிய அதிகாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று லக்ஷ்மிநாராயணன் கூறினார். காங்கிரஸ் அரசாங்கமும் பேடியும் நீண்ட காலமாக ஒற்றுமை இல்லாமல் ஆட்சி புரிந்து வருகின்றனர். உயர் நீதி மன்ற தீர்ப்பினால் மென்மேலும் விரிசல்கள் வராமல் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.