பொன்பரப்பி கலவரம்: போலீசார் பாதுகாப்பு அதிகரிப்பு, மறுதேர்தல் நடக்குமா?
ராம் குமார் (Author) Published Date : Apr 20, 2019 17:14 ISTPolitics
பொன்பரப்பியில் வன்முறை நடந்து ஒரு நாள் கழிந்த நிலையில், மக்கள் குறிப்பாக பெண்கள் பதட்ட நிலை அதிகரிக்கும் என்று அஞ்சுகின்றனர். சம்பவத்துடன் தொடர்புள்ள 12 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். பொன்பரப்பி, தொல் திருமாவாலவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் அடங்கும். வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பாமக . மற்றும் இந்து முண்ணனியுடன் இணைக்கப்பட்ட ஒரு சிலர் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் சின்னமான பானையை தெருவில் உடைந்தனர். இது சூடான விவாதங்களை தூண்டியதோடு தொண்டர்களை கைகலப்பில் ஈடுபட செய்தது. பின்னர், ஒரு கும்பல் தலித் காலனிக்குள் நுழைந்து பல வீடுகளை சேதப்படுத்தி, இரு சக்கர வாகனங்களை எரித்தனர். சம்பவத்தில் பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் காயமடைந்தனர்.
கிராமத்தில் அதிகப்படியான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டாலும், மேலும் தாக்குதல்களுக்கு அஞ்சி உள்ளனர் மக்கள். "கும்பல் மீண்டும் வந்து எங்களை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் நாங்கள் நேற்று இரவு தூங்கவில்லை. எங்கள் குடியேற்றம் அவர்களுடைய நிலங்களால் சூழப்பட்டுள்ளது. தாக்குதல்களை பார்த்த அதிர்ச்சியில் இருந்து எங்கள் குழந்தைகள் இன்னும் வெளியே வரவில்லை" என்று அங்கிருந்த மக்களில் ஒருவர் கூறினார்.
"பிரதான சாலையை அடைவதற்கு நாங்கள் அவர்கள் வசிக்கும் தெருக்களை தாண்டி செல்ல வேண்டும். எத்தனை காலம் காவல்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியும். போலீஸ் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டால் எங்களுக்கு என்ன நடக்கும்." என்றும் தன அச்சத்தை வெளிப்படுத்தினார்.
செந்துறையின் அரசு அதிகாரி காலனிக்கு சென்று வெள்ளிக்கிழமை சேதங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்தார். இதற்கிடையில், காலனி குடியிருப்பாளரான ஆர். குணசீலனின் புகாரை அடிப்படையாகக் கொண்டு, செந்துறை போலீஸ் 24 நபர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்தது, அவர்களில் 12 பேரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தாக்குதலின்போது எடுத்த வீடியோ குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் உதவியாக உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரினார். ஊடகங்களை சந்தித்து, பொன்பரப்பி தலித்துகள் தங்கள் உரிமையைக் கையாள்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் பல இடங்களில் பாமக வாக்குசாவடிகலை ஆக்கிரமித்து விட்டதாகவும் தெரிவித்தார்.