பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கை சந்திப்பில் பங்கேற்றார்
ராம் குமார் (Author) Published Date : May 17, 2019 21:39 ISTPolitics
5 வருடங்களில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேருக்கு நேர் நிருபர்களுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். பத்திரிகை சந்திப்பில் பெரும்பான்மையான இடங்களை பாஜக தான் ஜெயிக்கும் மறுபடியும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
பா.ஜ.க தலைவர் அமித் ஷா திட்டமிட்ட பத்திரிகையாளர் மாநாட்டிற்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக மோடி அவர்கள் மேடையில் முதன்முறையாக அமர்ந்து இருந்தார். மேலும் பத்திரிகை கூட்டத்தில் அவர் பிரச்சாரத்தின் விரிவான அறிக்கையை அட்டவணைபடுத்தி அறிவித்தார் மற்றும் தேசிய ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தின் செயல்திறன் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
அமித் ஷா உரையாற்றிய அமைத்த கூட்டத்தில் நரேந்திர மோடி அவர்கள் கட்சியின் முறைமை, ஒழுங்குமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதால் எந்தவொரு கேள்வியும் கேட்டக்கூடாது என்றார். நாங்கள் ஒழுங்குமுறை பின்பற்றும் வீரர்கள் என்றும் கூறினார்.
எதிர் கட்சிகள் மோடி அவர்கள் மீதும் அமித் ஷா அவர்கள் மீதும் வைத்த குற்றச்சாட்டு பற்றி கேள்விகள் எழும்பின. பாஜக தலைவர் எதிர்க்கட்சியில் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறினார்.
தங்களின் பெரும்பான்மையை காண்பிக்கவே இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் பிரச்சாரம் ஓயும் நிலையில் வேட்பாளராக இருக்கும் நரேந்திர மோடி தங்கள் கட்சிகள் செய்த திட்டத்தை எடுத்து கூறியும் பிரச்சார அறிக்கையும் வெளிட்டுள்ளார். தனது வாக்குகளை இக்கூட்டத்தின் மூலம் சேகரிக்க ஒரு துடுப்பாக அமைந்து விட்டது. இவ்வைத்தின் வெளிப்பாடு மக்களின் வாக்குகள் மூலம் அறியப்படும்.