கூடுகிறது சட்டசபை: பிரதமர் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்கள் பதவியேற்கின்றனர்
ராம் குமார் (Author) Published Date : May 27, 2019 18:25 ISTPolitics
17வது மக்களவை கூட்டம் வரும் ஜூன் மாதம் 6 அன்று தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் பாராளுமன்ற அமர்வு தேதிகள் மே 31 ம் தேதி நடக்கவிருக்கிம் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தின் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பின்வரும் நாளில் நாட்டின் நரேந்திர மோடி அவர்கள் இரண்டாவதாக முறையாக பதவி ஏற்கஉள்ளனர்.
ஜனாதிபதி ரம்நாத் கோவிந்த் ஜூன் 6 ம் தேதி பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தனது உரையை ஆற்றுவார். பின்னர் மக்களவை சபை தற்காலிக சாபநாயகர் அதே நாளில் நியமிக்கப்படலாம்.
தற்காலிக சாபநாயகர் புதிதாக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆணையிடு வழங்கி பதவி பிரமாணம் செய்து வைப்பார். ஜூன் 10 அன்று சபாநாயகர் தேர்தல் நடைபெறவிருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
சாபநாயகர் நியமானத்திற்கு பின்னர் இரு அவையை சார்ந்த உறுப்பினர்களின் நன்றி உரைக்கு பின்னர் பிரதமரின் உரை நடைபெறும்.
ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. ஜனாதிபதி அவர்கள் முன்மொழிய அனைவரும் பதவி ஏற்று கொள்வர்.
நரேந்திர மோடி அவரது ஐந்து வருட காலப்பகுதி முடிந்த பிறகு பா.ஜ.கவின் முதல் தலைவர் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சி சேர்ந்த தலைவர்கள் - ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் இரண்டு முறையாக பிரதமார்களாக பதவி வகித்துள்ளார்.