ஒடிசா வாக்கு சாவடிகளில் ஆளும் கட்சி பிஜத ஆக்கிரமிப்பு: பாஜக குற்றச்சாட்டு
ராம் குமார் (Author) Published Date : May 01, 2019 11:37 ISTPolitics
ஆளும் கட்சியினர் மோசடி செய்தும் வாக்கு சாவடிகளை சிறைபிடித்தும் திங்கட்கிழமை நடந்த தேர்தலில் வரைமுறைகளை மீறினர் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஒழுக்கமில்லாமல் 6 தொகுதிகளில் நடந்த வாக்கு பதிவை ஏற்றுக்கொள்ளாது மறு வாக்கு பதிவை நடத்த கூறி தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளனர். கட்சியின் மாநில துணைத் தலைவர் சமிர் மோகந்தி தலைமையிலான குழு தலைமை தேர்தல் அதிகாரி சுரேந்திர குமாருடன் சந்திப்பை மேற்கொண்டு தேர்தல் ஆணையத்திடம் உரையாற்றி, மேலும் ஒரு குறிப்பாணை சமர்ப்பித்தார்.
அவர் மயூரபஞ், பாலசோர், பாத்ராக், ஜெய்ப்பூர், ஜகத்திசிங்ப்பூர், கேந்திரபர ஆகிய ஆறு மாவட்டங்களில் நியாயமான முறையில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் அலுவலர்கள் தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார். தேர்தல் அலுவலர்கள் விதிமுறைகளை மீறி ஆளும் கட்சியினருக்கு வேலை செய்ததால், ஆறு தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பாணையத்தில் விளக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பின்தங்கிய நிலையில், பிஜு ஜனதா தளம்தொழிலாளர்கள் அதை சாதகமாக பயன்படுத்தி தேர்தல் நேரத்தில் மோசடி செய்துள்ளனர். சிங்கிரி பசாரில் உள்ள வாக்கு சாவடியில் ஆளும் கட்சியினரின் குண்டர்கள் அக்கிரமைப்பு செய்து மக்களை ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும் படி தேர்தல் ஆணையர்கள் முன்னிலையில் விதிமுறைகளை மீறி செய்கின்றனர் என்று ஆதாரமாக குறுந்தகடுகளில் பதிவேற்றி வழங்கினார். தேர்தல் முறைகேடுகள் நடந்த 6 தொகுதியில் உள்ள சாவடிகளை பாஜக குழுமம் பட்டியலிட்டுள்ளனர்.
பாரி சட்டசபை தொகுதியில் உள்ள சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் பி.ஜ.தா குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார் என்று குற்றம் சாட்டினார். இறுதி கட்ட தேர்தலில் 1,200 தேர்தல் ஊழியர்கள் தங்களது உரிமைகளை இழந்து, தபால் வாக்குகளை பதிவு செய்யாமல் உரிமை பறிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார்கள். மேலும் பிரநிதிகளின் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.