மோடி அமித்ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் வழக்கு
ராம் குமார் (Author) Published Date : Apr 29, 2019 18:40 ISTPolitics
மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான நரேந்திர மோடியும், அமித் ஷாவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ் வழக்கு தொடுத்துள்ளார். திங்கட் கிழமை , இன்று வழக்கை எடுத்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துத்துள்ளது. பிரச்சாரத்தில் இராணுவ நடவடிக்கைகள் பற்றி மக்களிடையே கூறியதால் இருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான குழு நாளை சுஷ்மிதா தேவின் மனுவை விசாரிக்கும் என்று கூறினர். மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் விதிமுறை மீறலை, தேர்தல் ஆணையம் புகாராக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தேவ்வின் மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் நான்கு வாரங்கள் முன்பே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கப்பட்ட நிலையிலும் மோடியும், அமித் ஷாவும் ராணுவ நடவடிக்கைகளை பிரச்சார கூட்டத்தில் பேசி விதி மீறலை மேற்கொண்டுள்ளனர் என்று வழக்கறிஞர் சிங்வி கூறினார். மேலும் நாளைய தினம் வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறினார்.