ads
மக்கள் நீதி மையம் மூன்றாம் பெரும் கட்சியாக அசத்திய தொகுதிகள்
ராம் குமார் (Author) Published Date : May 23, 2019 21:49 ISTPolitics
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு நல்ல ஒரு மாற்றத்திற்கான விதையை விதைத்து விட்டது என்றே கூறலாம். நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இருந்து கூடியவிரைவில் விடைபெறுவேன் என்று கூறி அரசியலில் இறங்கி மக்களுக்காக களப்பணி செய்யப்போவதாக கூறி தொடங்கிய கட்சியே மக்கள் நீதி மய்யம்.
நல்ல கொள்கை நேர்மை மற்றும் படித்த அறிவுத்திறன் பெற்ற வேட்பாளர்களை முன்னிறுத்திய மக்கள் நீதி மையம் தனது முதல் தேர்தலிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை எனினும் வாக்கு சதவிகிதம் கணிப்பை விட அதிகமாக பெற்று பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கமல் அரசியலுக்கு ஈடுபடமாட்டார் நடிகர் என்று கூறியவர்கள் கண்ணுக்கு மாற்றத்தின் முன்னோட்டத்தை லேசாக காட்டிவிட்டார் கமல் ஹாசன்.
பெரும் கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்ட நிலையில் அடுத்த பெரும் இடத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்றிருக்கிறது. நாம் தமிழர் கட்சியும் ஏறக்குறைய சமமான பலத்தை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய தொகுதிகளாக சென்னை கோவை மற்றும் மத்திய தமிழக தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் நல்ல வாக்கு எண்ணிக்கையுடன் மூன்றாம் இடத்தை பதிவு செய்தது.
கமல் ஹாசன் கட்சி வேட்பாளர்கள் மூன்றாம் இடம் பெற்ற தொகுதிகள் மத்திய சென்னை, வடசென்னை, தென் சென்னை, கோவை, சேலம், பொள்ளாச்சி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, மதுரை, புதுச்சேரி மற்றும் திருவள்ளூர் ஆகும். எல்லா தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஓரளவு நல்ல வாக்குகளை பெற்று மக்களின் நம்பிக்கை மாற்றத்தின் பக்கம் உண்டு என்று நிரூபித்தனர். சென்னையை சுற்றி உள்ள தொகுதிகளில் கட்சி அதிகபட்ச வாக்குகளை பதிவு செய்தது.
மேலும் கோவை தொகுதியில் வேட்பாளர் "டாக்டர் மஹேந்திரன்" லட்சம் தாண்டி வாக்குகள் பெற்றுள்ளார். பொள்ளாச்சி வேட்பாளரான மூகாம்பிகையும் பெரும் வாக்குகளை பெற்று மக்கள் பலத்தை எடுத்து காட்டினார். வரும் தேர்தலில் அதாவது தமிழகத்தின் விதியை தீர்மானிக்கும் 2021 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு பெரும் மாற்றத்தை உருவாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.