ads

உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை

உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை

உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை

பல வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது, இதற்கு தமிழகத்தின் மிக பெரிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். 

இந்த வருடும் கண்டிப்பாக தேர்தல் நடக்கும் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்த நாள் முதல், அனைத்து கட்சிகளிலும் வேட்புமனு தாக்கல் மற்றும் பல்வேறு வேலைகள் நடக்க தொடங்கின.

இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்கள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் தேர்தல் நடத்த நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா நடக்காதா என்று குழப்பம் நீடித்தது.

இன்று வந்த தீர்ப்பு இந்த குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பின்படி திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட் , திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி இல்லை.

குறிப்பிட்டுள்ள மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை