கேரள முதல்வர் பினராயி விஜயன் பத்திரிக்கை நிருபர்கள் மீது காட்டம்
ராம் குமார் (Author) Published Date : Apr 24, 2019 17:01 ISTPolitics
கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த பொது மாநிலத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிக அளவிலான வாக்குப்பதிவு பதிவானதை குறித்த தனது பார்வையை பற்றி கேட்டனர். அப்போது பினராயி விஜயன் தனது பொறுமையை இழந்து "விலகி இருங்கள்" என்று கூறி பதிலளிக்காமல் அரசு விருந்தினர் மாளிகையில் பத்திரிகையாளர்களை தட்டி கழித்தார்.
அரசாங்கத்தின் விருந்தினர் மாளிகையில் இருந்து வந்த பொழுது, இன்று காலை இந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. "மாறி நிக்கு அங்கொட்டு" என்று மலையாளத்தில் கூறி தனது வெறுப்பை வெளிப்படுத்தினார் கேரள முதல்வர். பொதுமக்கள் தேர்தலில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த தேர்தலில் இல்லாத ஒரு வாக்குப்பதிவை நிகழ்த்தியது குறித்த கேள்விக்கு, பினராயி விஜயன் கொடுத்த பதில் இது.
கேரள மாநிலத்தில் 20 தொகுதிகளில் 77.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆளும் எல்.டி.எப்.எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் அதிகபட்ச இடங்களைப் பெற கடுமையான போட்டியில் உள்ளனர். 2.61 கோடி வாக்காளர் எண்ணிக்கையை கொண்ட கேரளம் இந்த முறை யாருக்கு அதிக முக்கியத்துவம் அள்ளித்திருக்கிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.