வாக்கு எந்திரம் மீது குற்றம் சாட்டும் எதிர்கட்சிகள் தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும்: நரேந்திர மோடி
ராம் குமார் (Author) Published Date : Apr 24, 2019 17:44 ISTPolitics
தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு விருப்பமில்லாத எதிர்க்கட்சியினர் வேறு யுக்தியை கையாள்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். செவ்வாயன்று பத்திரிகையாளர் சந்திப்பில், பல பெரிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மையைக் குறித்து சந்தேகத்தை எழுப்பினர், இயந்திரங்களின் சரிபார்ப்புக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
வாக்கு எந்திரங்கள் கையாளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கூறியது, "மூன்று நிலை தேர்தல்களுக்குப் பிறகு அவர்களுக்கு எந்த வெற்றி வாய்ப்பும் கண்ணனுக்கு தெரியாததால் அவர்கள் குழந்தைகளை போல் காரணம் காட்டி வருகின்றனர் என்றார்.
"பரீட்சைகளில் தனது திறமையற்ற தன்மையை நியாயப்படுத்தும் ஒரு சாக்கு போல, எதிர்க்கட்சிகள் வாக்கு எந்திரங்களில் தங்கள் கோபத்தைத் திசைதிருப்பத் தொடங்கியுள்ளன, முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவுகளில் எதிர்க்கட்சிக்கு தங்கள் நிலை தெரிந்ததால் இப்படி குற்றம் சாட்டுகின்றனர், ஆனால் தோல்வியை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்" என்று அவர் கூறினார்.
நடக்கும் மக்களவை தேர்தலில் மூன்றாவது கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் தனது சொந்த தொகுதியான வாரணாசியில் போட்டியிடும் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல இடங்களில் தங்களது பயண அட்டவணையை தயார் செய்து இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார். நாடு முழுவதும் உள்ள கூட்டணி கட்சித்தலைவர்களோடு ஒரு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளார்.