ads

நம் கையில் மாநில அரசு! நாம் காட்டுவதே மத்திய அரசு!

நம் கையில் மாநில அரசு நாம் காட்டுவதே மத்திய அரசு

நம் கையில் மாநில அரசு நாம் காட்டுவதே மத்திய அரசு

திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த மூத்த அரசியல் தலைவருமான "கலைஞர்" மு.கருணாநிதி அவர்கள் 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். சரியாக 1969 முதல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர் 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பெருமை இவருக்கு உண்டு. 

மறைந்தாலும் அவரது நினைவலைகள் கட்சியின் உறுப்பினர்களையும், கட்சி தொண்டர்களையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து வைத்திருக்கிறது. இந்த தேர்தலில் கலைஞரின் பெயரையோ அல்லது முகத்தையோ அதிகம் பயன் படுத்தாமல் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளது திராவிட முன்னேற்ற கலகம்.

நடந்து முடிந்த 17 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. மக்களவைத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (23/05/2019) காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சி முன்னிலை, எந்த கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது என்ற பரபரப்பு தகவல்கள் உடனுக்குடன் ஊடகங்கள் வாயிலாக வந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில், மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.கருணாநிதி அவர்களின் சமாதியில் இன்று மலர்களால் தேர்தல் சம்பந்தமான வாக்கியங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்துள்ளதால், இதில் திமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்ற நிலையில் இருக்கிறது. இதனையடுத்து, மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் சமாதியில்,  "நம் கையில் மாநில அரசு! நாம் காட்டுவதே மத்திய அரசு" என்று மெரினாவில் உள்ள அவரது சமாதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நம் கையில் மாநில அரசு! நாம் காட்டுவதே மத்திய அரசு!