அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி: மூன்று சென்ட் நிலம் இலவசம்
புருசோத்தமன் (Author) Published Date : May 02, 2019 18:42 ISTPolitics
அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் திரு செந்தில் பாலாஜி அவர்கள், திமுக ஆட்சிக்கு வந்தால் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் மூன்று சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி குழப்பதினால், அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய டிடிவி தினகரனுடன் ஆதரவாக இருந்தார் பின் சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்தபின் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காரணத்தினால் வரவிருக்கும் இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் வேட்பாளராக செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டார்.
இன்று அரவக்குறிச்சியில் வாக்கு சேகரிப்பின்போது, மக்களை சந்தித்த செந்தில் பாலாஜி வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு திமுக சார்பில் மூன்று சென்ட் நிலத்தை இலவசமாக கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அங்கு கூடியிருந்த மக்கள் செந்தில் பாலாஜிக்கு அதிமுகவில் இருந்த திமுகவுக்கு வந்தார் என்ற பாகுபாடு இல்லாமல் அவரின் பிரச்சாரத்தை அமைதியாகவும் அன்பாகவும் வரவேற்றனர்.