ads

அரசியலில் கால் பதித்த பிரபல தலைவர்களின் பெண் வாரிசுகள்

இந்திரா காந்தி அறிய புகைப்படம்

இந்திரா காந்தி அறிய புகைப்படம்

1. இந்திரா காந்தி

இந்திரா பிரியதர்ஷினி காந்தி இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய நபரும் ஆவார். இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதம மந்திரி ஆவார். இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் மகள் ஆவார். ஜனவரி 1966 முதல் மார்ச் 1977 வரை அவர் பிரதமராக பணியாற்றினார். இவரின் சாதனைகளை பற்றி சொல்லி அறிய வேண்டியதில்லை.

2. சுப்பிரியா சுலே

மகாராஷ்டிராவின் பராமாட்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சரத் பவார் மகள் சுப்பிரியா சுலே, 1969 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். 2009 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற சுலே இப்போது ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பெற்றோர்: சரத் ​​மற்றும் பிரதிபா சரத்சந்திர பவார்

கல்வி: மும்பை ஜெய் ஹிந்த் கல்லூரியில் பி.எஸ்.சி. (நுண்ணுயிரியல்)

மேலும் கலிஃபோர்னியா, யூ.சி. பெர்க்லேயில் நீர் மாசுபாடு பற்றி படித்தார்.

3. கனிமொழி

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமோழி தூத்துக்குடியில் 2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் மூலம் மக்களவை தேர்தலில் கலம் கண்டுள்ளார். தமிழ்நாட்டின் ராஜ்யசபை தி.மு.க. தலைமையால் பரிந்துரைக்கப்பட்டபோது 2007 ஆம் ஆண்டில் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 2013 ஆம் ஆண்டில் மீண்டும் எம்.பி. ஆனார்.

பெற்றோர்: மு. கருணாநிதி மற்றும் அவரது மூன்றாவது மனைவி ராஜதி கருணாநிதி

எதிர்கொண்ட போட்டியாளர்கள்:  காங்கிரஸ் வேட்பாளர் குமாரி அனந்தன், தமிழிசை சவுந்தராஜன் (பாஜக மாநிலத் தலைவர்)

4. ப்ரியா தத்

ப்ரியா தத் அரசியல்வாதிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர் மட்டுமல்ல, புகழ்பெற்ற சினிமா துறையை சேர்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். பாலிவுட் நடிகர்கள் நர்கிஸ் மற்றும் சுனில் தத் ஆகியோருக்கு பிறந்தவர், நீண்டகால காங்கிரஸ் எம்.பி.யாக திகழ்பவர். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, மும்பை வடமேற்கிலிருந்து 2005 ல் முதல் முறையாக லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு தேர்தலில் மும்பை வடமத்திய தொகுதியில் இருந்து மீண்டும் வெற்றி பெற்றார்..

பெற்றோர்: சுனில் தத் மற்றும் நர்கிஸ்

கல்வி: பி.ஏ. (சமூகவியல்) சோபியா கல்லூரி, மும்பை பல்கலைக்கழகம் 

நியூயார்க்கின், மீடியா ஆர்ட்ஸ் கல்லூரியில் தொலைக்காட்சித் தயாரிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.

அரசியலில் கால் பதித்த பிரபல தலைவர்களின் பெண் வாரிசுகள்