ads
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்
ராம் குமார் (Author) Published Date : Apr 19, 2019 17:05 ISTPolitics
இரண்டு நாட்களுக்கு முன்னர், பிரியங்கா சதுர்வேதி, மதுராவில் உள்ள சில கட்சித் தொழிலாளர்கள் தன்னிடம் ஏப்ரல் 15 ம் தேதி, நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நடவடிக்கையின் மீது கொண்ட அதிருப்தியை தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் வியாழக்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து கட்சியை விட்டு விலகினார்
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் மும்பையில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய திருமதி சதுர்வதி, "சிவசேனா குடும்ப உறுப்பினராக என்னை இணைத்து கொண்டது மிகவும் கவர்ந்து விட்டது, உத்தவ்ஜி மற்றும் ஆதித்யாஜி'க்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறினார்.
"பிரியங்காவை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர் தனது கட்சியை உறுதியாக நம்பினார். சேனா சிறந்த தேர்வாக இருக்கும் என்று அவர் நினைத்தார். நான் உங்களை சேனா குடும்பத்திற்கு வரவேற்கிறேன்" என்றார் திரு தாக்கரே அவர்கள். முன்னதாக, சத்ருவ்தி தனது ட்விட்டர் வலைத்தளத்தில் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டபோது, மும்பையில் முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தங்கள் கட்சியில் சேரவுள்ளார் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரூட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவரது ராஜினாமா கடிதத்தில் திரு சதுர்வேதி கூறியதாவது, "கடந்த சில வாரங்களில், என் சேவைகளுக்கு மதிப்பு இல்லை என்று சில விஷயங்கள் எனக்கு உறுதி அளித்திருக்கின்றன, நான் சாலையின் முடிவுக்கு வந்துள்ளேன், அதே நேரத்தில் நானும் நான் நிறுவனத்தில் செலவிடும் நேரம், என்னுடைய சுய மரியாதை மற்றும் கௌரவத்தை குறைக்கின்றது."
I am absolutely overwhelmed and grateful with the love and support I have got across board from the nation in the past 3 days.
— Priyanka Chaturvedi (@priyankac19) April 19, 2019
I consider myself blessed with this immense outpouring of support. Thank you to all who have been a part of this journey. pic.twitter.com/WhUYYlwHLj