ads
சட்டசபை தேர்தல் 2019 முடிவுகள்: மீண்டும் மோடி அலை, அரசியல் பிரபலங்கள் வாழ்த்து
ராம் குமார் (Author) Published Date : May 23, 2019 16:41 ISTPolitics
இந்தியாவில் 542 தொகுதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் பாஜக அரசின் கை பெரிதும் ஓங்கியுள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. பிறகு மின்னணு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இம்முறை தலைமை தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் பாஜக கட்சி 336 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இன்று வெளியாகி கொண்டு இருக்குக் தேர்தல் முடிவுகளில் 345 தொகுதிகளில் பாஜக முன்னிலை ஆட்சி அமைக்கும் உரிமையை பெற்றுள்ளது. இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இம்முறை முதல் தடவையாக பெரும்பான்மை கொண்ட கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது.
1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து 16 பொதுத் தேர்தல்களை இந்தியா கண்டிருக்கிறது. இதில் 90 கோடி மக்கள் தகுதியுள்ள வாக்காளர்களாக உள்ளனர், இவற்றுள் சுமார் 15 கோடி முதல் முறையாக வாக்காளர்கள் இருக்கிறார்கள். உத்ராகண்ட், பீகார், கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா மத்திய பிரதேசம், அசாம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பெரும்பான்மையான வெற்றியை பெற்றுள்ளது.
அற்புதமான வெற்றிக்கு நரேந்திரமோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அவருடன் நெருக்கமாக உழைக்க நாங்கள் எதிர் பார்க்கிறோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ராமசிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி, ஈர்க்கும் விதத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். மிகப்பெரிய பொருளாதாரம் உலகத்தில் இந்த தேர்தல் முடிவுகள் சான்றாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஆழமான நட்பை தொடர்ந்து பலப்படுத்துவோம். நன்றாக செய்துள்ளீர் என் நண்பா என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், ஆனால் தோல்வி அடைந்தவர்கள் தோற்றவர்கள் அல்ல என்று மம்தா பானர்ஜீ வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேறும் மேலும் முன்னேற்றம் தொடரும் என்று வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். பல உலக தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இணைந்து வளருவோம் இணைந்து முன்னேற்றம் காண்போம் வலுவனா இந்தியாவை உருவாக்குவோம் என்று நரேந்திர மோடி பேட்டி.