அரவிந்த் கேஜ்ரிவால் மனைவிக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டை: பாஜக உறுப்பினர் குற்றசாட்டு
ராம் குமார் (Author) Published Date : Apr 30, 2019 18:21 ISTPolitics
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா மீது புகார் மனு தாக்கல் செய்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குர்னா. உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத் பாராளுமன்ற தொகுதிக்கு சார்ந்த ஒரு அடையாள அட்டையும், மற்றோன்று சாந்தினி சௌக் தொகுதிக்கு வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் அவமதிக்கும் விதமாகவும் மற்றும் தவறான வகையில் ஆத் ஆத்மி கட்சிக்கு பயனளிக்கும் வகையிலும், குற்றம் சட்டப்பட்டவரின் கணவர் தேசிய அமைப்பாளராக உள்ளார் என்று கூறினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது பெயரை வேண்டுமென்றே இரண்டு இடங்களின் வாக்காளர் பட்டியலில் வைத்துள்ளார் என்றார்.
1950 ம் ஆண்டு மக்கள் பிரதிநிதி சட்டத்தின் 17 மற்றும் 31 ஆம் பிரிவின் கீழும், மற்ற பிரிவின் கீழும் குற்றங்களை விசாரிக்க வேண்டி தில்லி காவல்துறைக்கு குர்னே கோரியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ பிரிவு 17 கீழ், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியில் பெயர் இருந்தால் வாக்காளர்களாக கருத்தப்படமாட்டார்கள் அதனை மீறினால் குற்றமாக கருதி ஒரு வருட சிறைத்தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று சட்டநீதிகளை கொண்டு விளக்கியுள்ளார்.
சட்டத்தின் 31-வது பிரிவு படி வாக்காளர் பட்டியலில் போலியாக பெயரை சேர்க்கப்பட்டாலோ அல்லது விலக்கப்பட்டாலோ குற்றமாக கருதப்பட்டு ஒருவருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். முன்னதாக, ஆத் ஆத்மி கட்சியின் கிழக்கு தில்லி வேட்பாளர் அடிசி, தன்னை ஏதிர்த்து போட்டியிடுகின்ற பா.ஜ.க வேட்பாளர் கவுதம் கம்பீர் மீது இரண்டு வாக்காளர் அடையாளங்களைக் வைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறினார்.