ads
அ.ம.மு.கவிடம் இருந்து பணம் பறிமுதல் செய்ய வானை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு
ராம் குமார் (Author) Published Date : Apr 17, 2019 18:08 ISTPolitics
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைத்து வைத்து இருந்த பணத்தை பறிமுதல் செய்ய சென்ற பறக்கும் படையினரை தடுக்க முயன்ற அ.ம.மு.க கட்சியினரை அச்சுறுத்த போலீசார் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். உறைகளில் பணம் நிரப்பப்படுவதாக வந்த செய்தியை கொண்டு பறக்கும் படையினர் கட்சியின் அலுவலகத்திற்கு சென்றனர். வருவதை தெரிந்து கொண்ட கட்சி நபர்கள் அலுவலகத்தை உள்ளிருந்து தாளிட்டு கொண்டனர். அலுவலகம் முன் கூட்டம் கூடவே போலீசார் விரைந்து வந்து கதவுகளை திறக்க முயற்சித்தனர்.
கூட்டம் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்ததால் காற்றில் பறக்க நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடந்தது. பிறகு லேசான அடிதடியும் நடத்தினர். பின்னர், அறையை திறந்து மூன்று பேரை கைது செய்தனர். 50 லட்சத்திற்கும் குறைவான தொகையை பறிமுதல் செய்தனர். பறக்கும் படையினரின் தகவலின் பேரில் தேனி மாவட்ட பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கடையில் வைத்து பணம் கொடுப்பதாக அறிந்து பார்வையிட்டனர். அதிகாரிகளை கண்ட கடை உரிமையாளரும் அ.ம.மு.க ஆதரவாளருமான அவர் கடையை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
முதலில் போலீஸார் மந்தமாக தேடுதலை நடத்தினர், அப்போது சில பண கட்டுகள் காணப்பட்டது. கூட்டத்தில் சிலர் கடையை மீறி சில பண கட்டுக்ககளை எடுத்து தப்பிக்க முயன்றனர். அதிகாரிகள் தடுக்கவே பண கட்டுகளை கைவிட்டு சென்றனர் என்று வருமான வரி துறையினர் கூறினார். எஸ்.பி. மற்றும் கலெக்டரின் தலையீட்டுடன், நிலைமை இப்போது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது மேலும் வருமான துறையின் தேடல் தொடர்கிறது.பண உறைகள் மேல் வார்டு எண்கள் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கையையும், ரூ300 எழுதப்பட்டு இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.