ads
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கைது
வேலு சாமி (Author) Published Date : Dec 20, 2018 18:19 ISTPolitics
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலை சென்னை, பாண்டிபஜார் போலீசார் கைது செய்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது திரைத்துறையை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த சிலர், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டுள்ளனர்.
இந்த பூட்டை உடைக்க வந்த விஷாலை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். இதன் பிறகு விஷாலின் எதிர்தரப்பை சேர்ந்த பாரதிராஜா, ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விஷால் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இந்த மனுவில் 'விஷால் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உடனடியாக 4 மாதத்திற்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த வேண்டும். விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க குழுவிடம் கணக்கு வழக்குகள் பற்றிய விவரங்களை கேட்க வேண்டும். சங்கத்தின் நிதியில் இருந்து 7.85 கோடியை அனுமதியின்றி செலவு செய்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ் மற்றும் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து 33 கோடியை பெற்றுள்ளார். எங்களுக்கு நல்ல நிர்வாகம் அமைத்து தர வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.