Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

137 வேட்பாளர்கள் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கடும் போட்டி

முதல்வர் பழனிசாமியுடன் சூலூர் வேட்பாளர் கந்தசாமி

மே 6-ம் தேதி நான்கு தொகுதிகளில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் இடங்களில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் மட்டும் 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் 91 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவற்றில் 62 சுயேட்சைகள் மனு தாக்கல் செய்துள்ளார். 23 வேட்பாளர்களின் வேட்பு மனுவை பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. மேலும் ஐந்து பேர்  தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற்றனர். மொத்தம் 63 பேர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டிடுகின்றனர் .

அரவக்குறிச்சி மட்டும் இல்லாது, திருப்பரங்குன்றத்தில் 37 வேட்பாளர்களும், சூலூர் 22 வேட்பாளர்களும் மற்றும் ஓட்டப்பிடாரத்தில் 15 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., நா.த.க., ம.நீ.ம., அ.ம.மு.க., ஆகிய ஐந்து கட்சியின்  வேட்பாளர்களும்  நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்ரதா சாஹு, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு காணொளி மூலம் சந்திப்பை மேற்கொண்டார். மேலும் மே 23 அன்று நடக்கவிருக்கும் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் செய்யப்பட்ட ஏற்பாடுகள் பற்றி மதிப்பாய்வு செய்தார். வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடைமுறைகளையும் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பையும் காணொளி மூலம் உறுதி செய்தார். 

137 வேட்பாளர்கள் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கடும் போட்டி