ads
உலக சுற்றுச் சூழல் தினம் 2019: மும்பை பவாய் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் சமூக ஆர்வலர்கள்
ராம் குமார் (Author) Published Date : Jun 05, 2019 13:40 ISTஇந்தியா
உலக சுற்றுசூழல் தினமான இன்று மும்பை பவாய் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 300கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். பவாய் ஏரி சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் மாற்றட்டும் மக்களோடு இணைந்து இளைய சுற்றுசூழல் ப்ரோக்ராம் என்ஜிஓ'வின் கீழ் சமூக ஆர்வலர்கள் குலத்தை சுத்தம் செய்து வருகின்றனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த பணி மாலை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரியில் மக்களால் போடப்படும் காகித குப்பை, சிகரெட் துண்டுகள், ரசாயன கழிவுகள் மற்றும் வீடு உபயோக கழிவுகள் ஏரி சுற்றுசூழலை மாசுபடித்து ஏரியில் வாழும் உயிரங்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நிலையில் உள்ளது. பறவை, முதலை போன்ற விலங்குகளின் சரணாலயமாக விளங்கி வரும் பவாய் ஏரியின் உயிரினங்களை காப்பதற்காக களமிறங்கி உள்ளது தன்னார்வத்தொண்டு நிறுவனம்.
இன்று உலக சுற்றுசூழல் தினத்தை காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுற்றுசூழல் ஆர்வலர்களால் நியமிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் அடையும் காற்றுப் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதை குறைக்கும் நோக்கம் கொண்டு உலகம் முழுவதும் இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரங்கள் நடுவதோடு அதனை வளர்க்கும் அணைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
பம்பாய் ஸ்காட்டிஷ் மஹிம் பள்ளியின் இளைய அமைப்பாளர் தலைமையில் வீடு வீடாக சென்று சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. இது பவாய் ஏரியை குப்பை கிடங்காக மாற்றி அங்குள்ள இயற்கை சொத்துக்களை கெடுக்காமல் இருக்கும் நோக்கில் செய்யப்பட்டு வருகிறது. பவாய் ஏரியை சுத்தமாக வைப்பதில் மக்கள் பங்கு வரும் நாட்களில் இருக்கவேண்டும், மேலும் ஆர்வலர்கள் மரம் நடுதல் மற்றும் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.