ads
கொரோனா பரிசோதனைக் கருவி விலை விபரங்களை வெளியிடவேண்டும், மு.க.ஸ்டாலின்
புருசோத்தமன் (Author) Published Date : Apr 18, 2020 16:56 ISTஇந்தியா
கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் கருத்து யுத்தம் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் இன்று மத்திய அரசிடம் இருந்தும், சீனாவில் வாங்கிய கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தமிழகத்திற்கு வந்துள்ளது, மொத்தம் 36,000 கருவிகள் வந்துள்ளது. இந்த கருவிக்கு பெயர் ரேபிட் கிட் டெஸ்ட் என்பார்கள்.
இதை சுலபமாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால், கர்ப்ப பரிசோதனை கிட் போன்ற ஒரு கருவி. பெண்கள் கர்ப்ப பரிசோதனைக்காக உபயோக படுத்தும் அதே அளவில் தாம் கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் ரேபிட் கிட் டெஸ்ட் கருவியும் இருக்கும்.
இதன் மூலம், நாம் விரைவாக கொரோனா தொற்று இருப்பதை கண்டறியலாம். இது ஒருபுறம் இருந்தாலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சத்தீஸ்கர் மாநில அரசு, இவர்கள் இறக்குமதி செய்த ரேபிட் கிட் டெஸ்ட் விலையை வெளிப்படையாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதன் விலை Rs. 337+ GST என வெளியீட்டுள்ளனர்,
"இதை போல் தமிழக அரசும், பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்!"
என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.