ads
ரமலான் ஸ்பெஷல்: நோம்பின் மகிமை தெரிந்துகொள்வோம்
கௌரிசங்கர் (Author) Published Date : May 08, 2019 16:51 ISTஇந்தியா
இஸ்லாமியர்கள் ராமலானுக்காக நோம்பு இருப்பது வழக்கம். இந்த நோம்பு இஸ்லாமியர்கள் மட்டும் தான் இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. மத சமாச்சாரங்களை தாண்டி நோம்பு இருக்கும் முறை நமது உடல் ஆரோக்கியத்திற்கு எத்தனை நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம். மனதை கட்டுப்படுத்தி ஒரு நிலையில் செலுத்துவதில் நோம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சரியாக 5 வேளை தொழுதல், குரான் படிப்பது, நல்லது பற்றியே பேசுவது என நோம்பு காலத்தில் கடைபிடிக்கும் சில பழக்கங்கள் தீயவரை கூட நல்வழிக்கு அழைத்து செல்லும் வல்லமை கொண்டது. நோம்பில் முக்கியமாக நாம் எல்லோரும் அறிந்திருப்பது உணவு உண்ணாமல் இருப்பது.
நோம்பு இருந்தால் சாப்பிட வாய்ப்பிருந்தும் பசியை உணர்ந்து இனிவரும் நாட்களில் உணவை மதித்து உண்ண வேண்டும் என்ற மேலோங்கிய எண்ணம் நம் மனதில் உருவாகும். இப்படி உணவு உண்ணாமல் இருக்கும் போது உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. நோம்பு ஆரம்பிக்கும் காலத்தில் ஏற்கனவே உண்ட உணவின் ஆற்றல் உடலில் மிச்சம் இருக்கும். துவக்கத்தில் இவை உடல் ஆற்றலுக்கு உதவும். பின்னர் கல்லீரலில் உள்ள கிளைகோஜன் குளுக்கோஸாக மாற்றப்பட்டு. சிலநாள் உடல் இயக்கத்திற்கு உதவும். பின்னர் உடலில் உள்ள கொழுப்புகள் உடைப்பட்டு அன்றாட உடல் செயல்பாட்டிற்கு உதவும். இந்த கட்டத்தில் தான் எடை குறையும்.
இதனால் நீரழிவு நோய் வரவும் வாய்ப்புள்ளது. இதற்கு பின்னர் வரும் காலகட்டத்தில் நோம்பு உணவில், சரியான அளவு கொழுப்பு நிறைந்திருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது உணவில் நீர், புரதம், கொழுப்பு எல்லாம் சரியான அளவில் இருக்க வேண்டும், நோம்பு எதிர்காலத்தில் பல நோய் தாக்குதலில் இருந்தும், தொற்றுகளில் இருந்தும் உடலை காக்கிறது. நோம்பின் பாதி நாட்கள் முடியும் காலத்தில், உடல் நோம்பு அமைப்பிற்கு உறுப்புகளின் பணியை தக்கவைத்து கொள்ளும். இப்போது தான் இதுவரை உங்களது உடலில் இருந்த கெட்ட நச்சு கழிவுகள் வெளியேற தொடங்கும். இந்த காலகட்டத்தில் உறுப்புகள் அதிகமாக வேலை செய்ய துவங்கும்.
நோம்பிற்கு பிறகு உங்களது உழைக்கும் திறன், நினைவாற்றல் எல்லாம் மேம்பாட துடங்கும். நோம்பின் போது தான் நாம் என்ன சாப்பிடுகிறோம், அன்றாட வாழ்க்கையில் புரதம், கொழுப்பு, கார்போஹட்ரேட் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து உண்கிறோம். நோம்பு காலத்தில் கொழுப்பு உடைபட்டு ஆற்றலாக மாறுகிறது. ஆனால் தொடர்ந்து நோன்பு இருப்பின் தசைகள் ஆற்றலாக மாற்றப்படும். இது நல்லதும் அல்ல. பெரியவர்களின் அறிவுரைப்படி முறையான நோம்பு, உடல் கழிவுகளை அகற்றி புத்துணர்வு அடைய செய்வதுடன் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். உணவில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டம் இது. நல்ல பழக்கங்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை ஒரு முறையாவது பின்பற்றி பார்ப்பதே இந்த காலத்தில் சாலச்சிறந்தது. இஸ்லாமியர்கள் பின்பற்றும் இந்த நோம்பு பழக்கம் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோகியத்தையும் உணவில் மீது நமக்கு இருக்க வேண்டிய கவனத்தை அதிகப்படுத்தும்.