ads
பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது
ராம் குமார் (Author) Published Date : May 08, 2019 12:57 ISTஇந்தியா
தமிழ்நாடு கல்வி துறை இன்று பதினொன்றாம் தேர்வு முடிவுகள் வெளியிட்டது. மொத்தம் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளார். தேர்வுகள் பிப்ரவரி மாதம் 13 முதல் 22 வரை நடைபெற்றது. தேர்ச்சி சதவீதம் 95 ஆக பதிவாகியுள்ளது. எப்பொழுதும் போல் இம்முறையும் மாணவிகள் தேர்ச்சி சதவிதத்தில் முதன்மை பெற்று உள்ளனர். மாணவிகள் 96 சதவீத தேர்ச்சியும் மாணவர்கள் 93 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்
2634 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் 98 சதவீதம் பெற்று முதல் இடத்திலும் திருச்சி மாவட்டம் இரண்டாம் இடத்திலும் கோவை மாவட்டம் மூன்றாவது இடத்திலும் இடம் பெற்றுள்ளது. அரசாங்க பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 90.6 ஆக உள்ளது. மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 99.1 ஆக பதிவாகி உள்ளது. சிறைவாசிகள் 78 நபர்கள் பொது தேர்வுகள் எழுதினார். அவற்றில் 60கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பதினொன்றாம் வகுப்புக்கு பொது தேர்வுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு முன்னதாக ஒரு மாதிரி தேர்வாக சந்திப்பது மாணவர்களின் மனா அழுத்தத்தை குறைக்கும். தற்போது நடைமுறையில் உள்ள புது கல்விமுறை கடினமாக இருந்தாலும், மாணவர்களின் அறிவு திறனை மேன்படுத்துமாறு உள்ளதாக பலரும் கருது தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு போன்ற கடுமையான தேர்வுகளை சந்திக்க மாணவர்களை தாயார் படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள பாடத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கின்றனர் மக்கள். தேர்வு முடிவுகள் சாதகமாக வந்த நிலையில். பள்ளி கல்வி துறை இது போன்ற பல திட்டங்களை தொடங்க உறுதுணையாக இது அமைந்துள்ளது. தேர்வு முடிவுகளை காண tnresults.nic.in மற்றும் https://dge1.tn.nic.in/hscfy.html இணையதளத்தை கிளிக் செய்க.