இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஓற்றுமை.
ராசு (Author) Published Date : Apr 14, 2021 11:39 ISTஇந்தியா
புதிதாக பிறந்துள்ள "பிலவ" வருட தமிழ் புத்தாண்டில், உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன், ஒற்றுமையாகவும் விழிப்புணர்வுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
இந்த பிலவ வருடத்தில், நாம் எந்த ஒரு பஞ்சாங்கத்தையும் ராசி பலன்களையும் பார்க்க அவசியம் இல்லாத ஒரு ஆண்டு. அடுத்த தலைமுறைக்கு தேவையான இயற்கையை நம்மால் முடிந்தவரை பாதுகாத்து கொடுப்பது, இன்றைய தலைமுறையின் கடமை.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் செய்த சாதனைகள் நாம் இன்றளவும் ரசித்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று வாழும் தமிழ் மக்கள் பல நாடுகளில் இடம் பெயர்ந்தாலும், சில நூறு ஆண்டுகள் பின்பு வாழப்போகும் புதிய தலைமுறைக்கு நாம் ஒன்றும் செய்து வைக்காமல் தவறிவிட்டோம்.
நம்மால் சாதனைகளை செய்ய முடியாமல் போனாலும், நமது பழக்கவழக்கங்களை சுயமாக சிந்தித்து, அதில் இருக்கும் தவறுகளை சரி செய்தலே அடுத்த தலைமுறை வாழ்வு பெறும்.
25 வருடத்திற்கும் முன் நாம் தூங்கும் நேரம் அதிகபட்சம் இரவு 9 மணி, ஆனால் இன்று சாதாரணமாக நாம் உணவு மேற்கொள்ளும் நேரம் இரவு 9.30 மணி, பின் 11 மணி அளவிற்கு தேவையான நிகழ்ச்சிகளை செல்போன் அல்லது தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு தூங்குகிறோம்.
இந்த பிலவ வருடத்தில் இரவு 7 மணிக்கு உணவை முடித்துவிட்டு, குடும்பத்தினரிடம் கலந்துரையாடிவிட்டு குறைந்தது இரவு 9 மணிக்கு தூங்கி காலையில் 6.30 மணிக்காவது எழுங்கள்.
உடல் பருமனை அதிகரிக்கும் அரிசி வகைகள் தவிர்த்து, பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை உண்ண தொடங்குங்கள். நீங்கள் உடல் பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் போனாலும் சரி, நீங்கள் போதுமான ஆரோகியதுடன் வாழலாம்.
இதை பின்பற்றினால், நாம் எந்த ஒரு குருட்டு நம்பியுடன் எந்த ஒரு ராசிபலனையும் பின்பற்ற தேவையில்லை. எந்த ஒரு வேலையையும் நேர்மையாகவும், சோம்பேறித்தனம் இல்லாமல் செய்தால், பலன் கண்டிப்பாக கிடைக்கும், குருட்டு அதிர்ஷ்டத்தை பின்பற்றாதீர்கள்.
உங்களுக்கு நல்ல முறையில் பிலவ வருட பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டில் பூஜை அறை இல்லை என்றாலும், வாரம் ஒருமுறை நாம் வைத்திருக்கும் கடவுளின் புகைப்படத்தை சுத்தம் செய்து வழிபடுங்கள்.
முன்னோர்களின் புகைப்படம் இருந்தால், தனி அறையில் வைத்து மாதம் ஒருமுறைவது வணங்குங்கள். புகைப்படம் இல்லை என்றாலும் கவலை இல்லை, மனதில் நினைத்து வேண்டுங்கள். இவர்களின் ஆசி இறந்த பிறகும் நம் வீட்டை சுற்றி இருக்கும், ராசி பலன்களை விட இவர்களின் ஆசி மிக வலிமை வாய்ந்தது.
பல நூல்களில் குறிப்பிட்டதைப்போல், முன்னோர்கள் கோபமாக இருந்தால், வீட்டில் இருக்கும் குடும்பத்தினர்கள் அவசியம் இல்லாமல் சண்டைபோடுவார்கள். நமக்காக வாழந்த முன்னோர்களை ஒற்றுமையுடன் வருடத்திற்கு ஒரு முறையாவது வணங்குவது நல்லது.
அனாவசியமாக பிச்சை காரர்களுக்கு பணம் கொடுப்பது பாவம், காரணம் சிலர் இதை தொழிலாக செய்வதுதான். நமக்கு எந்த ஒரு பலனும் கிடைக்க வாய்ப்பில்லை.
மிகவும் வயதானவர்களுக்கு தானமாக உணவு அளிப்பதும் தவறு. வயதானவர்கள், இந்த வயதில் வேலை செய்து சம்பாதிக்க முடியாது, நமது வீட்டில் இருக்கும் ஒரு வயதானவர் என்ற எண்ணத்தில் மட்டுமே நாம் உணவளிக்க வேண்டும். இல்லையேல் இது சுயநல சேவையாக கருதப்படும் பாவம்.
இவைகள் பிலவ தமிழ் புத்தாண்டில் நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.