கொரோனா சிறப்பு மருத்துவமனையாக பெருந்துறை மருத்துவக் கல்லூரி அறிவிப்பு
புருசோத்தமன் (Author) Published Date : Mar 23, 2020 20:55 ISTஇந்தியா
மூன்று மாவட்டங்கள் 144 தடை உத்தரவு
நேற்று மத்திய அரசு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை 144 தடையை அமல் படுத்துமாறு மாநில அரசுக்கு தகவல் அனுப்பியது. பொதுமக்கள் இந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தனர், பின்னர் இதற்கான காரணத்தை அறிந்த பின் மக்கள் தங்களை தயார் படுத்திக்கொண்டனர்.
பெருந்துறையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம்
தாய்லாந்து நாட்டில் இருந்து மதத்தை பரப்புவதற்காக வந்ததாக கூறப்படும் இருவர் முதல் சோதனையில் கொரோனா அறிகுறி இல்லாமல் இருந்தது பின் இவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றனர். சென்ற இவர்கள் பல இடங்களில் பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களை உடனடியாக தனிமை படுத்தி சிகிச்சை ஆரம்பித்தனர்.
ஒரு ஊரே தனிமை படுத்தப்பட்டுள்ளது
பின் இவர்கள் சென்று வந்த இடங்கள் மற்றும் இவர்களுடன் அதிகம் பழகிய நபர்கள் அனைவரையும் கண்டுபிடித்து தனிமை படுத்தியுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி, தங்களுக்கு இவர்களால் வரும் என்று தெரியாமல் சுமார் 650கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிப்படைந்தனர், பின் இவர்கள் வசிக்கும் அதே ஊரில் தனிமை படுத்தி கண்காணித்து வருகிறார்கள். இவர்களில் இன்றளவும் புதிதாக யாருக்கும் கொரோனா உறுதிப்படுத்தவில்லை, சோதனை முடிவுகளும் வரவில்லை. இவர்கள் அனைவரும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு:
இதுதான் முக்கிய காரணம் மத்திய அரசு ஈரோடு மாவட்டத்தை தனிமை படுத்த வலியுறுத்திய காரணம் .
இவர்களால் மேலும் யாருக்கும் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. சூழ்நிலை இப்படி இருக்கும் நிலையில், மாநில அரசு இன்று மாலை கொடுத்த அறிக்கையில், தமிழகத்தில் நாளை 24ஆம் தேதி மார்ச் மாதம் 2020, ஆறு மணி முதல் 144 தடை உத்தரவு அறிவித்துள்ளது.
கொரோன சிறப்பு மருத்துவமனை:
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பெருந்துறை மருத்துவமனையில் உள்ள அனைத்து பொது நோயாளிகள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்றும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொரோன சிறப்பு மருத்துவமனையாக இன்று மாவட்ட ஆட்சியர் திரு கதிரவன் அறிவித்துள்ளார்.