ads
தமிழகத்தில் ஊரடங்கு கிடையாது, வதந்திகள் பரப்பினால் கைது, முதல்வர்
விக்னேஷ் (Author) Published Date : Jun 12, 2020 15:17 ISTஇந்தியா
கடந்த இரண்டு நாட்களாக தமிழக மக்கள் மத்தியில் தேவை இல்லாத வதந்திகள் சிலர் பரப்பினர். அதில் முக்கியமான ஒன்று " மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு" . இவ்வாறு வரும் செய்திகளால் மக்கள் மீண்டும் பதற்றம் அடைந்து அத்தியாவசிய பொருட்கள் அவசரகதியில் கூட்டமாக வாங்கும் அபாயம் ஏற்படும்.
இந்த வதந்தி பரப்ப முக்கிய காரணம், சென்னையில் இருந்து பலர் இரண்டு சக்கர வாகனம் வாயிலாக பல மாவட்டங்களுக்கு சென்றதால், இதுவரை கொரோனா தொற்று இல்லாமல் இருந்து மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த வதந்தியை பரப்பியவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புகைப்படத்தை இணைத்து, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டு, வரும் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு வரும் என பரப்ப தொடங்கினார்கள்.
இதை அறிந்த தமிழக முதல்வர், இன்று இந்த வதந்தியை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு இல்லை என தகவுள் தெரிவித்துள்ளார், மேலும் கூறுகையில் "எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்."