ads

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட்டவரின் மன நிலை

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட்டவரின் மன நிலை

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட்டவரின் மன நிலை

ஒரு காலத்தில் அகிம்சையை கடைபிடித்த இந்தியா, 2020 மார்ச் 20 அன்று நான்கு கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு, பல போராட்டங்களுக்கு பின் வெற்றிகரமாக தூக்கு தண்டனை வழங்கி நீதி துறையின் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மரண தண்டனையை நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் மிகுந்த சந்தோசத்துடன் கொண்டாடினார்கள், அந்த அளவிற்கு கடுமையான குற்றத்தை குற்றவாளிகள் செய்திருந்தார்கள்.

இவ்வாறு மக்கள் குற்றவாளிகளை தூக்கிலிட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்த இதே நாட்டில் வேறு எண்ணம் கொண்ட மக்களும் இருக்கிறார்கள். இவர்களின் கேள்வி, எதிர்காலத்தில் இதுபோன்ற அனைத்து குற்றங்களையும் மரண தண்டனை நிறுத்துமா? முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்பும் கூட இதைத்தான் நினைத்தார். 

இது ஒருபுறம் இருக்க, இவர்ளை தூக்கிலிடும் நபரின் எண்ணங்கள் என்னவாக இருக்கும் அல்லது இவர்கள் இதை தங்களது கடமையாக நினைத்து செய்கிறார்களா? இவர்களை பற்றி அதிகம் மக்கள் நினைப்பதே இல்லை.

நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றனர். அதாவது சொத்து பிரச்சனை, முன்விரோதங்கள் என பல காரணங்களுக்காக கொலை செய்கிறார்கள். ஆனால் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் இவர் தனக்கு எந்த ஒரு சம்பந்தம் இல்லாத ஒரு நபரை அரசாங்கத்தின் உத்தரவின்படி இவர் தூக்கிலிட்டு கொள்கிறார், எந்த ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாமல், இது ஒரு வேலையாக, தனக்கு கொடுத்த கடமையாக செய்கிறார்.

பொதுவாக ஒரு நபர் தன் கண்முன்னே ஒருவர் இறப்பதை பார்ப்பதும், இறப்பவர் தன் கையால் இறக்கிறார் என்றால் இவர்களின் மன நிலை எவ்வாறு இருக்கும்? இது அவரவர் மன வலிமையை பொறுத்ததே. இது ஒரு வேலை மட்டுமே, வேலை முடிந்தவுடன் இவர்கள் வீட்டிற்கு சென்று சகஜமாக தங்களது வேலையை மேற்கொள்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கூறுவது, தங்கள் கடமையை செய்ததாக கூறுகிறார்கள்.

இன்று நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட்ட பவன் குமார் கூறியது,  சுரேந்தர் கோலியின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டபோது, ​​நியாயப்படுத்த முடியாத குற்றத்தைச் செய்த சுரேந்தர் கோலி போன்ற குற்றவாளிகள் வாழ்ந்தது வேதனைக்குரியது என தனது ஆதங்கத்தை கூறியிருந்தார். இவ்வாறு இவரின் எண்ணம் இருக்கையில், இவருக்கு மன அழுத்தம் இருக்க வாய்ப்பு குறைவு மற்றும், இவர் குற்றவாளிகளை தூக்கிலிடும் போது, இது ஒரு வேலையாக தான் கருதுகிறார்.

பவன் அவரது குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை மரணதண்டனை செய்பவர், இவர்களது குடும்பத்திற்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் பெரும் அனுபவம் உள்ளது. 60க்கும் மேற்பட்ட மரணதண்டனைகளைச் செய்த தனது தாத்தாவிற்கு இவர் உதவியுள்ளார் மற்றும் இவரின் தந்தை சுமார் 12 மரணதண்டனைகளைச் செய்த போது, இவருக்கும் உதவியுள்ளார். 

இப்பொழுது, இவரும் தனது மரண தண்டனை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார். ஆனால், இப்போது 27 வயதாகும் இவரது மகன், மரணதண்டனை செய்பவனாக இருப்பதற்கு அதிக அக்கறை காட்டவில்லை என்பது ஒருபுறம் ஆச்சர்யமாக தெரிகிறது.

கடந்த பத்து வருடத்தில், இந்தியாவில் நான்கு மரணதண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. ஒன்று 2012 ல் அஜ்மல் கசாப்; இரண்டாவது 2013 இல் அப்சல் குரு; மூன்றாவது 2015 இல் யாகூப் மேமன், நான்காவது நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகள். அஜ்மல், அப்சல் மற்றும் யாகூப் ஆகியோரை தூக்கிலிட்ட நபரின் அடையாளத்தை இந்தியா இன்னும் பாதுகாத்து வருகிறது. காரணம், இவரது குடும்பத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால். 

பதிவுசெய்யப்பட்ட தூக்கிலிடும் நபர்களுக்கு இந்திய அரசு ஒவ்வொரு மாதமும் ரூ .3000 உதவித்தொகையாக செலுத்துகிறது. இருப்பினும், வெற்றிகரமான மரணதண்டனைக்குப் பிறகு அதிக சம்பளம் கிடைக்கும். பகுதிநேர துணி விற்பனையாளரான பவன், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உதவித்தொகையைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக புகார் அளித்திருந்தார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், தவறு செய்தவர்களைக் மரண தண்டனை மூலம் கொள்வதால் தான் சமூகத்திற்கு ஒரு உதவியைச் செய்வதாக பவன் நினைக்கிறார். இருப்பினும் மரண தண்டனை என்பது அசாதாரணமானது மற்றும் இந்திய நீதித்துறையில் அரிதானது. அண்மையில் இந்தியாவில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பவன், இந்த வேலையைச் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், இந்த மிருகத்தனமான சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தூக்கிலிட வேண்டும், இது சமூகத்தில் ஒரு வலுவான செய்தியை அனுப்பும். 

கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிடுவது தனக்கு நிம்மதியை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அவர் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்டது அவருக்கும்  நிர்பயாவின் பெற்றோர் மற்றும் மற்ற அனைவருக்கும் ஒரு நிம்மதியைத் தரும்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட்டவரின் மன நிலை